சூப்பர் சிங்கர் போட்டியில், தமிழக பாரம்பரிய கிராமிய பாடல்களை பாடி வெற்றிப்பெற்ற செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கிறார்.
பிரபல தனியார் தொலைகாட்சி நடத்திய நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். உலகம் முழுவதும் வாழும் பல்வேறு இளைஞர்கள் போட்டிப் போட்டு பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தை சேர்ந்த கிராமிய கலைஞர்கள் செந்தில் கணேஷ் மற்றும் அவர் மனைவி ராஜலட்சுமி பங்கேற்றனர்.
இந்த போட்டியில் இறுதி சுற்று வரை சென்று பட்டத்தை தட்டிச் சென்றார் இவர். மேலும் இவர்கள் இருவரின் இசையில் புகழ்பெற்ற சின்ன மச்சான் பாடலும் சமீபத்தில் பிரபு தேவா படத்தில் இடம்பெற்றது.
ஹீரோவாக நடித்திருக்கும் செந்தில் கணேஷ் :
இத்தகைய புகழ்பெற்ற செந்தில் - க்கு தற்போது மற்றொரு அரிய வாய்ப்பு கதவை தட்டியிருக்கிறது. இயக்குநர் செல்வ தங்கையா இயக்க இருக்கும் கரிமுகன் என்ற படத்தில் செந்தில் ஹீரோவாக அறிமுகமாகி நடித்திருக்கிறார்.
கரிமுகன் போஸ்டர்
இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி, மிகவும் வைரல் அடைந்தது. இருப்பினும் இப்படம் இணையத்தில் குறிப்பிட்டிருப்பது போல் 2017ம் ஆண்டு வெளியாகியதா அல்லது வெளியாக காத்திருக்கிறதா என்று காத்திருந்தே தெரிந்துகொள்ள வேண்டும்.