Advertisment

இணை போட்டியாளருடன் காதலா? சூப்பர் சிங்கர் சிவாங்கி விளக்கம்

சூப்பர் சிங்கர் போட்டியாளரான சிவாங்கி தனது இணை போட்டியாளரை காதலிப்பதாக பரவிய வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
இணை போட்டியாளருடன் காதலா? சூப்பர் சிங்கர் சிவாங்கி விளக்கம்

விஜய் டிவியில் ஒலிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில், மக்களிடம் அதிக வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. இந்த ஷோவின் முதல் சீசன் முடிவடைந்துள்ள நிலையில், 2-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. சமையலுடன் நகைச்சுவையும் கலந்த இந்த ரியாலிட்டி ஷோ குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினரையும் கவர்ந்துள்ளது.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுடன் கோமாளியாக ஒரு நகைச்சுவை போட்டியாளர் உடன் இருப்பார். சமைப்பவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை இந்த கோமாளிகளே எடுத்து கொடுப்பது வழக்கம். இந்த ரியாலிட்டி ஷோவில், அனைவரின் கவனத்தையும் ஈர்த்த போட்டியாளர் பாடகர் சிவாங்கி என்பதில் சந்தேகமில்லை. அவர் தனது நகைச்சுவையான நடிப்பின் மூலம் இந்த ஷோடிவில் ஒரு  மேதையாகவும் மாறிவருகிறார்.

இந்நிலையில், அண்மையில் எபிசோடில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் சிவாங்கியின் நகைச்சுவை திறனை பாராட்டினார். மேலும் சிவாங்கியின் பெரிய ரசிகர் என்பதை வெளிப்படுத்திய சிவகார்த்திகேயன் அவருக்கும் நம்பிக்கை தரும்வகையில் பேசினார்.  இந்நிலையில், சிவாங்கி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன்னுடைய இணை போட்டியாளர் சாம் விஷாலை காதலிப்பதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.

தற்போது இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள சிவாங்கி, அவரும் சாம் விஷலும் சிறந்த நண்பர்கள் என்று கூறியுள்ளார்.  மேலும் அவருடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறியுள்ள அவர், எங்களுக்கு இடையே காதல் இல்லை என்று கூறியுள்ளார்.  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிவாங்கி போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment