scorecardresearch

ஷிவாங்கி ஷாக் முடிவு: குக் வித் கோமாளிக்கு டாட்டா… பைபை..!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகியான இவர், கோமாளியாக என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது

shivangi, cookku with comali, ஆரஞ்சு மிட்டாய் ஷிவாங்கி, ஷிவாங்கி லேட்டஸ்ட் ஸ்வீட் க்ளிக்ஸ், Shivangi latest Orange Mittay clicks, cookku with Comali
ஷிவாங்கி

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடையாளம் என்று அழைக்கப்படும் நடிகை சிவாங்கி தான் இனிமேல் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என்று கூறியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில், ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் விஜய்டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பெரும் பிரபலம். இந்த நிகழ்ச்சியில் பாடல் பாடி ரசிகர்கள் மனதில் இடம்பெற்றவர் சிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் இவர் சாம்பியன் பட்டம் பெறவில்லை என்றாலும் கூட இவரது குரலுக்கு ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகியான இவர், கோமாளியாக என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், புகழ் மற்றும் அஸ்வினுடன் இணைந்து காமெடியில் கலக்கினார் சிவாங்கி. புகழ் சிவாங்கி காம்போ குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கே அடையளமாக மாறியது.

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் குக் வித் கோமாளி சீசனில் குக்காக களமிறங்கியுள்ள சிவாங்கி அவரது ரசிகர்களுக்கு இன்ப  அதிர்ச்சி கொடுத்த நிலையில், அவர் மீண்டும் எப்போது கோமாளியாக வருவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே சிவாங்கியின் இன்ஸ்டா பக்கத்தில் நீங்கள் எப்போது மீண்டும் கோமாளியாக வருவீர்கள் என்று கேட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள சிவாங்கி இனிமேல் அதற்கு வாய்ப்பில்லை இந்த சீசனில் குக்காக உங்கள் அனைவரையும் மகிழ்வித்துவிட்டு மற்ற நிகழ்ச்சிகளின் மூலம் உங்களுடன் தொடர்பில் இருப்பேன் என்று கூறியுள்ளார். சிவாங்கியின் இந்த பதில் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிவாங்கி ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தார் என்று பலரும் யோசித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Super singer shivangi quite in cook with comali show in vijay tv

Best of Express