அலைபாயுதே ஸ்டைலில் சிவாங்கி லவ் ப்ரொபோஸ்: அந்த ஹீரோ யாருன்னு பாருங்க!

super singer sivaangi :அலைபாயுதே ஸ்டைலில் இஹான் பாத்திடம் லவ் ப்ரேப்போஸ் செய்த சிவாங்கி.

shivangi, super singer shivangi, cooku with comali shivangi, cook with comali shivangi, ஷிவாங்கி, சூப்பர் சிங்கர், குக்கு வித் கோமாளி, ஷிவாங்கி இசை குடும்பம், shivangi music family, shivangi music family background

சமீபத்தில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அலைபாயுதே ஸ்டைலில் சிவாங்கி ஒரு ஹீரோவுக்கு லவ் ப்ரொபோஸ் செய்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் 99 சாங்ஸ் இயக்குநர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஹீரோ இஹான் பாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வழக்கமாக அட்ராசிட்டிஸ் செய்யும் சிவாங்கி ஹீரோ இஹான் பாத்திடம் லவ் ப்ரொபோஸ் செய்துள்ளார். அலைபாயுதே ஸ்டைலில் “நீ அழகா இருக்கனு நா நினைக்கல …உன் கண்ணு பிரவுன் கலருல இருக்குனு நா நினைக்கல.. இதெல்லாம் நடந்துடுமோனு பயமாக இருக்கு” என அலப்பறை செய்துள்ளார்.

நிகழ்ச்சியில், சிவாங்கியை இஹானிடம் இந்தியில் பேச சொல்லி தொகுப்பாளர் மா.கா.பா கூறியுள்ளார். அப்போது சிவாங்கியோ, “அவருக்கு தான் ஹிந்தியில பேசினா பிடிக்காதே” என்று ரஹ்மானை குறிப்பிட்டு காண்பித்து சொன்னார். இதற்கு அரங்கத்துடன் சேர்ந்து பதிலுக்கு தானும் சிரித்த ரஹ்மான், “தமிழ் ஷோவில் தமிழ் பேசுங்கள் … ஹிந்தி ஷோவில் இந்தி பேசுங்கள்” எனக் குறிப்பிட்டார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இசையுடன் இணைந்த காதல் கதையான ’99 சாங்ஸ்’ திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கில் ஏப்ரல் 16 அன்று இந்தியா முழுவதும் வெளியாகிறது. ரஹ்மானின் முதல் தயாரிப்பான இப்படைப்பின் கதாசிரியரும் அவரே ஆவார். ‘தி தேவாரிஸ்ட்ஸ்’ மற்றும் ‘பிரிங் ஆன் தி நைட்’ புகழ் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Super singer sivaangi fun love proposal to ar rahman flim 99 songs ehan bhat

Next Story
உடலில் மலைப் பாம்பை நெளிய விட்டபடி டான்ஸ்: சன் டிவி சீரியல் நடிகை ‘த்ரில்’ வீடியோsun tv, sun tv sundari serial actress gabriella sellus, சன் டிவி, சுந்தரி சீரியல் நயாகி கேப்ரியெல்லா செல்லஸ், கேப்ரியெல்லா செல்லஸ் கழுத்தில் மலைப்பாம்புடன் நடனம், என்ஜாய் எஞ்சாமி, வைரல் வீடியோ, சுந்தரி , கேப்ரியெல்லா செல்லஸ், actress gabriella sellus dancing with python, gabriella sellus dance for enjoy enjami song video, viral video
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express