Advertisment

அமெரிக்காவில் இருந்து இன்று இந்தியா திரும்புகிறார், ரஜினிகாந்த்!

அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த், இன்று இரவு சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அமெரிக்காவில் இருந்து இன்று இந்தியா திரும்புகிறார், ரஜினிகாந்த்!

உடல் பரிசோதனைக்காக கடந்த மாதம் 25ம் தேதி அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த், இன்று இரவு சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த ஏப் 25ம் தேதி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார். உடல்நல பரிசோதனைகள், அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஆலோசனைகள் என இந்த பயணம் குறித்த பின்னணி காரணங்கள் வெளிவந்த நிலையில், அமெரிக்காவின் சில வணிகவளாகங்களை ரஜினி சுற்றிப்பார்ப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின.

இந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று இரவு இந்தியா திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை வந்ததும் அவர் மே 9ம் தேதி நடைபெறும் ’காலா’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார்.

தொடர்ந்து ’காலா’ பட ப்ரமோஷன், ஷங்கரின் 2.0 மற்றும் கார்த்திக் சுப்பராஜின் பெயர் அறிவிக்கப்படாத படம் ஆகிய பணிகளில் அவர் ஈடுபடவுள்ளார். இதற்கிடையில் தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளை அவர் மேற்கொள்வார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment