Advertisment
Presenting Partner
Desktop GIF

சிகிச்சைக்காக பல லட்சம் செலவு: ஒரே சந்திப்பில் குணப்படுத்திய ரஜினிகாந்த்!

நான் அவரை சந்தித்ததிலிருந்து நன்றாக உணர்கிறேன். அவருக்கு சக்திகள் உள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth

Rajinikanth

Superstar Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்துக் கொண்டிருக்கிறார். அதோடு மற்ற நடிகர்களையும் தனது மிகப்பெரிய ரசிகர்களாகக் கொண்டவர். அவரது எளிய மற்றும் தன்மையான குணம் பலருக்கும் பிடிக்கும். இப்போது தனது ரசிகர் ஒருவர் உடல்நலக் குறைவிலிருந்து மீள காரணமாகியிருக்கிறார்.

Advertisment

சென்னையைச் சேர்ந்த அனீஷா என்ற பெண்ணுக்கு பைபோலார் பிரச்னை மற்றும் மிகப்பெரிய மன அழுத்தக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது. அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் சிகிச்சைக்காக பல லட்சம் வரை செலவழித்ததாகவும் அனீஷாவின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடனான சந்திப்பு அவரது வாழ்க்கையை மாற்றியது என்றும், அவரது உடல்நிலை மேம்பட்டு வருகிறது என்றும் அந்த பெண் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். "நான் அவரை சந்தித்ததிலிருந்து நன்றாக உணர்கிறேன். அவருக்கு சக்திகள் உள்ளன. மேலும் டாக்டர்கள் என்னால் எந்த மனிதர்களிடமும் எனது உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது என்று கூறுகிறார்கள். ஆனால் நான் நினைக்கிறேன், என்னால் முடியும். நான் அவரை நேசிக்கிறேன். என்றென்றும் அவரது விசிறி” என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் அனீஷா.

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment