லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆகஸ்டு 10ம் தேதி வெளியாகத் தயாராகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் பிஜிலி ரமேஷ் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் சமீபக் காலமாக பெரிதளவில் பிரபலமடைந்துள்ளார் பிஜிலி ரமேஷ். இவரைத் தனியார் யூடியூப் சேனல் ஒன்று பேட்டி எடுத்தது. அதில் இவர் நகைச்சுவையோடு பேசியது பலரையும் கவர்ந்துள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் இப்படி யாராவது ஒருவர் பிரபலம் ஆவது தற்போது டிரெண்டாக மாறியுள்ளது. ஜிமிக்கி கம்மல், டப்ஸ்மேஷ் சித்ரா ஆண்டி போன்று பலரும் இண்டெர்நெட்டில் ஓவர் நைட் ஒபாமா ஆகியுள்ளனர். இது போல் இந்த ஆண்டு, இணையத்தளம் முழுவதும் பேச்சால் வைரல் ஆனவர் தான் எம்.ஜி.ஆர் நகர் பிஜிலி ரமேஷ். இவரது பேச்சை பலர் டப்ஸ்மேஷ் செய்ய தொடங்கியுள்ளனர்.
இத்தகைய புகழுக்கு பிறகு யூடியூப் வீடியோக்களில் நடிக்கத் தொடங்கியவர் தற்போது நயன்தாரா நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தின் ப்ரோமோ வீடியோவில் தோன்றியுள்ளார். இதன் மூலம் இந்தப் படத்தில் ஒரு சிறிய ரோலில் இவர் நடித்துள்ளார் என்று தெரிய வருகிறது. படத்தில் வரும் கமிச்கபா என்ற ஜிபெரிஷ் பாடலில் இவர் தோன்றுகிறார்.
July 2018
இந்தத் தகவலை வெளியிட்ட அப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத், கபிஸ்கபா பாடலில் பிரோமோ வரும் 19ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.