’இந்த வயதிலும் ஃபிட்டாக இருக்கிறீர்கள், நீங்கள் ஒரு சூப்பர் ஹீரோ’ ரஜினியை புகழ்ந்த பியர் கிரில்ஸ்

‘நீ ரஜினிகாந்த்’ என்று யாராவது எனக்கு நினைவூட்டும்போது தான்,  ஓ! நான் ரஜினிகாந்த் என்ற எண்ணம் எனக்குள் வரும்

By: Updated: March 23, 2020, 10:27:46 PM

Rajinikanth : ரஜினிகாந்தின் ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சியில், ரஜினி கயிறு மூலம் மலை ஏறியபோது,  “இந்த வயதிலும் நீங்கள் ஃபிட்டாக இருக்கிறீர்கள், நீங்கள் ஒரு சூப்பர் ஹீரோ” என்று பியர் கிரில்ஸ் ரஜினியை புகழ்ந்துள்ளார்.

ரஜினிகாந்தின் ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சி மார்ச் 24 இரவு ஒளிபரப்பானது. கர்நாடகாவின் பந்திப்பூர் தேசிய பூங்காவில் நடந்த இந்தப் படப்பிடிப்பில் ரஜினியின் சாகசங்களை ரசிகர்கள் நிஜத்தில் பார்த்து ரசித்தனர்.

டிஸ்கவரி சேனல், டிஸ்கவரி ஹெச்.டி, டி தமிழ், அனிமல் பிளானட், அனிமல் பிளானட் ஹெச்.டி, டி.எல்.சி, டி.எல்.சி எச்டி, இன்வெஸ்டிகேஷன் டிஸ்கவரி, இன்வெஸ்டிகேஷன் டிஸ்கவரி ஹெச்.டி, டிஸ்கவரி டர்போ, டிஸ்கவரி கிட்ஸ் உள்ளிட்ட 12 டிஸ்கவரி சேனல்களில் ரஜினிகாந்தின் இந்நிகழ்ச்சி மார்ச் 23 இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது. இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி, தெலுங்கு, மராத்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட எட்டு மொழிகளில் இதன் ப்ரீமியர் ஒளிபரப்பாகிறது.

ரஜினி காந்த் இடம்பெறும், ‘இன் டூ த வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சியில் ரசிகர்கள் என்னென்ன எதிர்பார்க்கலாம் என்பதை இங்கே குறிப்பிடுகிறோம்.

பியர் கிரில்ஸுடன் காட்டிற்கு சென்ற ரஜினி

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆபத்துக்களையும், சவால்களையும் எதிர்கொள்வார். ஆற்றின் மேல் 50 அடி உயரத்தில் உள்ள இரும்பு பாலத்தில் அவர் ஆற்றைக் கடப்பார். பாலத்தைக் கடக்கும்போது, “அந்த பாலத்தின் இரும்பு மிகவும் சூடாக இருந்தது. என்னால் நீண்ட நேரம் அங்கு நிற்க முடியவில்லை. அதனால் நான் தொடர்ந்து செல்ல வேண்டியிருந்தது. கடவுளே! நான் அதை செய்து விட்டேன்” என்றார்.

ஸ்டன்னிங் ஐஸ்வர்யா, நன்றி சொன்ன நயன் : படத் தொகுப்பு

நண்பர்களிடமிருந்து செய்திகளை பெறும் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘இன் டூ தி வைல்டு வித் பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சியில் பல சவால்களை எடுத்துக் கொண்டாலும், இடையில் தனது நண்பர்களிடமிருந்து சில அபிமான செய்திகளையும் பெறுவார். எபிசோட் ஒளிபரப்பப்பட்ட பிறகு அந்த நண்பர்கள் யார் என்று தெரிந்துக் கொள்வீர்கள்.

தண்ணீர் குறித்த விழிப்புணர்வு

இன்றிரவு ஒளிபரப்பாகும் எபிசோடில், ரஜினிகாந்த் பியர் கிரில்ஸுடன் காட்டுக்குள் சென்று நீர் பாதுகாப்பு குறித்து பேசுவார். “தண்ணீரை ஆளுகிறவன் உலகை ஆளுகிறான். இது உலகளாவிய பிரச்சினை. அதன்படி இந்தியாவிலும் இப்பிரச்னை கடுமையானது. உலகில், 2.1 பில்லியன் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் ” என்று குறிப்பிட்டார்.

வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்துக் கொள்வார்

நடிகராவதற்கு முன்பிருந்த தனது வாழ்க்கையை பியர் கிரில்ஸுடன் பகிர்ந்துக் கொள்வார் ரஜினி. நடிகராவதற்கு முன்பு, நடத்துனராக பணியாற்றிய அனுபவத்தையும் பகிர்ந்துக் கொள்வார். “நான் ஒரு பஸ் நடத்துனராக இருந்தேன். பின்னர், மெட்ராஸில் (சென்னை) ஒரு திரைப்பட நிறுவனத்தில் படித்தேன். அங்கு, மூத்த இயக்குனர் கே.பாலசந்தரை சந்தித்தேன். அவர் என்னைத் தேர்ந்தெடுத்து என் பெயரை மாற்றினார். உண்மையில், எனது பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட்” என்றார் ரஜினி.

புகழை எவ்வாறு கையாளுகிறீர்கள் என்று கிரில்ஸ் கேட்டதற்கு, “நான் புகழை என் மூளைக்கு எடுத்துக் கொள்வதில்லை. நடித்தவுடன், அது முடிந்து விடும். நான் ரஜினிகாந்தை மறந்து, மீண்டும் சிவாஜி ராவாகி விடுவேன். ‘நீ ரஜினிகாந்த்’ என்று யாராவது எனக்கு நினைவூட்டும்போது தான்,  ஓ! நான் ரஜினிகாந்த் என்ற எண்ணம் எனக்குள் வரும் என்றார்”.

இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பியர்ஸ் கிரில்ஸூடன் ரஜினி காட்டில் சாகச பயணம் செய்தார். பல அடி உயரமுள்ள மலை மீது ரஜினி கயிறு மூலம் ஏறிய போது கையில் லேசான சிராய்ப்பு ஏற்பட்டது. அப்போது உங்களுடைய வயது என்ன என்று பியர் கிரில்ஸ் கேட்டார், எனக்கு வயது 70 என்று ரஜினி கூறவே. அதற்கு இந்த வயதிலும் நீங்கள் ஃபிட்டாக இருக்கிறீர்கள், நீங்கள் ஒரு சூப்பர் ஹீரோ என்றார்.பியர் கிரில்ஸ். , ஸ்டைலாக கண்ணாடியை அணிய முயற்சித்தார் பியர் கிரில்ஸ். பின்னர் அவருக்கு ரஜினி, ஸ்டைலாக கண்ணாடி அணிந்து செய்து காட்டினார்.

நரேந்திர மோடி தலைமைப் பண்புக்கு கடும் சவால்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Super star rajinikanth in to the wild with bear grylls

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X