ரஜினிகாந்த் தன்னுடைய படங்கள் திரையரங்குகளில் சரியாக வசூலாக வில்லை என்றால், நஷ்டமான தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளார். இப்படி ரஜினிகாந்த் செய்வது ஏதோ சமீப ஆண்டுகளில் மட்டும் செய்யவில்லை. நஷ்ட ஈடு தோல்விப் படங்களுக்கு கொடுத்தால் பரவாயில்லை, வெற்றி பெற்ற படத்துக்கே ரஜினிகாந்த் தயாரிப்பாளருக்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு கொடுத்த விஷயத்தை தயாரிப்பாளர் ராஜன் ஒரு நேர்காணலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஆர்.எம். வீரப்பன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தங்கமகன் படம் பெரும் வெற்றி பெற்றாலும் அந்த படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய், 3 மாதங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிறகு, உடல்நிலை சரியாகி படத்தை நடித்து கொடுத்துள்ளார். தங்கமகன் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கு பிறகு, தங்கமகன் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எம். வீரப்பன், ரஜினிக்கு தரவேண்டிய மீதி சம்பளம் 10 லட்சம் ரூபாயைக் கொடுக்கச் சென்ற்றுள்ளார். ஆனால், ரஜினி அதை வாங்க மறுத்துள்ளார். நான் 3 மாதம் உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்தேன். என்னால், 3 மாதம் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது. இதனால், உங்களுக்கு எவ்வளவு நஷ்டம் ஆகியிருக்கும் என்பது எனக்குத் தெரியும். இந்த படத்தை எடுப்தற்காக எவ்வளவு கடன் வாங்கி இருப்பீர்கள், அந்த கடனுக்கு எவ்வளவு வட்டி ஆகியிருக்கும். அதனால், தனக்கு தரவேண்டிய 10 லட்சம் ரூபாயைத் தர வேண்டாம் என்று ரஜினிகாந்த் மறுத்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/thangamagan.jpg)
இந்த சம்பவம் ஏதோ இன்று நேற்று நடந்ததல்ல, இயக்குனர் ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் ரஜினிகாத் நடித்த தங்கமகன் படம் 1983-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை ஆர்.எம். வீரப்பன் தயாரித்திருந்தார். இந்த படத்தில்தான் அந்த நிகழ்வு நடந்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்னரே தயாரிப்பாளர் சுமையை உணர்ந்த ரஜினிகாந்த், தனக்கு தரவேண்டிய பாக்கி சம்பளம் 10 லட்சம் ரூபாயை வேண்டாம் என்று மறுத்துள்ளார். அதனால்தான், ரஜினிகாந்த் எல்லா காலத்திலும் அவர் தயாரிப்பாளர்களின் நடிகர் என்று கோலிவுட் கொண்டாடுகிறது. அதனால்தான், அவர் 73 வயதிலும் ஹீரோவாக அதே மாஸ் உடன் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். ரஜினிகாந்த் இப்போது மட்டுமல்ல, அப்பவே அவர் அப்படித்தான் இருந்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“