Advertisment

தர்பார் செகண்ட் லுக்: ’40 வருஷமா பாக்ஸ் ஆஃபிஸ் கிங்கு டா ரஜினி...’

Super Star Rajinikanth: விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என எல்லா ரசிகர்களுமே தர்பார் செகண்ட் லுக்கை கொண்டாடுகிறார்கள்.

author-image
WebDesk
Sep 12, 2019 13:29 IST
New Update
darbar motion poster, darbar movie

Darbar secondlook reactions

Darbar Second Look Twitter Reactions: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த தற்போது ’தர்பார்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisment

ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, நவாப் ஷா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் மற்றும் யோகி பாபு போன்றோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ’பேட்ட’ திரைப்படத்தைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக ரஜினிகாந்துடன் கைக்கோர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்கிறார்.

இந்நிலையில் நேற்று மாலை ’தர்பார்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. கறுப்பு நிற பனியனை அணிந்துகொண்டு ஒர்க் அவுட் செய்வது போல் (அல்லது ஆக்‌ஷன் காட்சிகளில் யாரையாவது வெளுத்து வாங்குகிறாரா என்று தெரியவில்லை) அந்த போஸ்டர் இருந்தது.  இதனைப் பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும், இவருக்கு உண்மையாவே 69 வயதாகிறதா? என ஆச்சர்யப்பட்டு போயினர்.

அப்படி சில சுவாரஸ்யமான ட்விட்டர் பதிவுகளை இங்கே பார்ப்போம்.

அனிருத்தின் இசையோடு இந்த சீன் ‘கொல மாஸாக’ இருக்கும்.

விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என எல்லா ரசிகர்களுமே தர்பார் செகண்ட் லுக்கை கொண்டாடுகிறார்கள். தமிழ் சினிமா ரசிகர்கள் சண்டையால் பிரிந்திருக்கிறது, ரஜினிகாந்தால் அது இணைந்திருக்கிறது.

40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்...

தலைவர் மும்பை பேக்ரவுண்ட்ல நடிச்ச பாட்ஷா செம்ம ஹிட். ஏ.ஆர்.முருகதாஸ் மும்பை பேக்ரவுண்ட்ல இயக்குன துப்பாக்கி தெறி ஹிட். இப்போ இவங்க ரெண்டு பேருமே சேர்ந்து மும்பை பேக்ரவுண்ட் படத்துல வேலை செஞ்சிருக்காங்க!!!

வயசுங்கறது வெறும் நம்பர் தான்...!

#Rajinikanth #A R Murugadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment