ரஜினி வாய்ஸ் மெசேஜ்… திக்குமுக்காடிப் போன புகழ்: அப்படி என்ன சொன்னார் சூப்பர் ஸ்டார்?

Super Star wishes Vijay TV Pugazh Birthday audio goes viral: விஜய் டிவி புகழ் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய சூப்பர் ஸ்டார்; இணையத்தில் வைரலாகும் ஆடியோ

விஜய் டிவி பிரபலம் புகழின் பிறந்தநாளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுப்பிய வாழ்த்து செய்தியை புகழ் சமூக வலைதளங்களில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டதன் மூலம் பிரபலமானவர் புகழ். கலக்கப் போவது யாரு, அது இது எது, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் புகழ் பங்கேற்று வந்தார். பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் செய்த சேட்டைகள், இன்று விஜய் டிவி நிகழ்ச்சிகளை விட்டுவிட்டு திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு பிஸியாக்கியுள்ளது.

தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் புகழுக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அந்த செய்தியில், வணக்கம் புகழ், இன்னைக்கு வந்து பிறந்தநாள் கொண்டாடும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள், God bless, love you என சூப்பர் ஸ்டார் வாழ்த்தியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் அனுப்பிய வாய்ஸ் மெசேஜை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகழ், என் வாழ்நாளில் மறக்க முடியாத பிறந்தநாள் இது. என் தலைவன் வாழ்த்துக்களோட இந்த நாள நான் தொடங்கறேன். திரை உலகிற்கு வருவதற்கே அவர் ஒரு ரோல் மாடல் எனக்கு. அப்படி அவர பார்த்து ரசிச்சு வளர்ந்த எனக்கு அவர் வாயால வாழ்த்து சொல்லி இருக்கிற மகிழ்ச்சிய எப்படி வெளிப்படுதறதுனு தெரியல. இப்படி ஒருநாள் என் வாழ்க்கைல வரும்னு நான் கனவுல கூட நினைச்சு பார்த்தது இல்லை. நான் எந்த இடத்துக்கு போனாலும், அவருக்கு இருக்கிற ரசிகர்கள்ல நானும் ஒருத்தன் அது தான் எனக்கு பெருமை. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அன்பும், நன்றிகளும் மக்களே… @ரஜினிகாந்த் என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Super star wishes vijay tv pugazh birthday audio goes viral

Next Story
பாகுபலி-2-வின் அடுத்த சாதனை… உலகளவில் 9,000 திரையரங்குகளில் ரிலீஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com