பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாராக மாறிய ரஜினியைதான் உலகம் அறியும். ஆனால் அவரது இளவயதில், வறுமை அவரை வாட்டி வதைத்தது. எப்படியாவது பணக்காரனாகி விடவேண்டும் என்ற எண்ணத்தில் தான் தான் சினிமாவுக்கு வந்ததாக ரஜினியே பலமுறை மேடையில் சொல்லியிருக்கிறார்.
Advertisment
ரனியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து அப்படி ஒன்றும் அவருக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை. ரஜினி ஆவதற்கு முன், சிவாஜி ராவ் ஒரு சாதரண மேடை நாடக நடிகராகத் தான்’ தன் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். நடிப்பின் மீது அவருக்கு இருந்த அதீத நாட்டம்தான்’ 70களின் தொடக்கத்தில் சிறிய மேடை நடிகராக இருந்த அவரை மெட்ராஸ் வரை கொண்டு வந்தது.
1975ல் கமல்ஹாசன் நடிப்பில் கே.பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' படத்தில் சிறிய வேடத்தில் ரஜினிகாந்த் அறிமுகமானார்.
தன்னால் ஹீரோவாக முடியாது, எனவே சாதரண வில்லன் வேடம் கூட கிடைத்தால் போதும் என்கிற எண்ணத்தில் தான் ரஜினி இருந்தார். அப்போதுதான் முதல்முறையாக ரஜினி ஹீரோவாக நடித்து, வெளிவந்த பைரவி’ படம் வசூல் சாதனை படைத்தது. அந்த வெற்றியிலிருந்து தான், ரஜினியுடன் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தும் சேர்ந்து கொண்டது. அன்றிலிருந்து’ நான்கு தசாப்தங்களை கடந்தும் தமிழ் சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டாராக ரஜினி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
இந்நிலையில்’ 70களில் ரஜினி தனது சொந்த ஊரான பெங்களூரில்’ கன்னட மேடை நாடகம் ஒன்றில் நடிக்கும் அரிய புகைப்படம் ஒன்று, இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ரஜினி ஒரு பழங்குடி போல வேடமணிந்து’ கையில் ஒரு தீப்பந்தத்தை பிடித்திருக்கிறார். இந்த போட்டோவை ரஜினி ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
கடைசியாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான 'அண்ணாத்த' பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. மீண்டும் அதே புரோடக்ஷனுடன்’ நெல்சன் இயக்கித்தில் அனிருத் இசையமைக்க ரஜினி நடிக்கும் 'தலைவர் 169' படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“