Happy Birthday Rajinikanth: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரை மற்றும் அரசியல் பிரபலங்களும்,ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே ரஜினியின் அரிய புகைப்படங்களை இங்கே நாங்கள் பதிவிடுகிறோம்.
நடிகர் ரஜினிகாந்த் 1975-ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கிய ’அபூர்வ ராகங்கள்’ மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.
தொடக்க காலத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் தான் பெரும்பாலும் நடித்தார். படத்தில் தமிழ் சினிமாவின் மற்றொரு உச்ச நட்சத்திரம் கமலுடன் ரஜினி.
சினிமாவுக்கு அவர் செய்த பங்களிப்புக்காக, ஆறு தமிழ்நாடு மாநில விருதுகளை வாங்கியிருக்கிறார் ரஜினி.
ரஜினிகாந்திற்கு 2000-ல் பத்ம பூஷண், 2016-ல் பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டது.
நடிகர் என்பதைத் தவிர, தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என்ற பெருமையும் ரஜினிகாந்திற்கு உண்டு.
டிசம்பர் 31, 2017 அன்று, ரஜினிகாந்த் அரசியலில் நுழைவதை அறிவித்தார். படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருடன் ரஜினிகாந்த்.
2021 தமிழக சட்டப்பேரவையில் ரஜினிகாந்த் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் பிரட் ஸ்டைம்லியுடன் ’பிளட் ஸ்டோன்’ படத்தில் நடிக்கும் போது எடுக்கப்பட்ட படம் தான் இது.
ரஜினிகாந்த் கடைசியாக பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ரஜினிகாந்த் அடுத்ததாக காவல்துறை அதிகாரியாக தர்பார் படத்தில் நடித்துள்ளார். இதில் ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கும் ரஜினிகாந்த் பாலிவுட், ஹாலிவுட் உள்ளிட்ட பல திரையுலகங்களில் பல்வேறு படங்களில் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.