Rajinikanth Birthday Today Updates: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம், இந்திய சினிமா ரசிகர்களை தனது ஸ்டைலால் கவர்ந்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
பெங்களூருவில் பஸ் கண்டக்டராக பணியாற்றிய இவர் 1975-ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் பாலச்சந்தரின் அபூர்வராகங்கள் படத்தின் மூலம் தனது கலை பயனத்தைத் தொடங்கினார். அந்தப் படத்தில் ரஜினியின் அறிமுகமே ரஜினி ஒரு கேட்டை திறப்பது போல் இருக்கும். அப்போது திறந்த கதவு தான், அவரை இன்னும் இன்னும் உச்சத்திற்கு கொண்டு சென்றுக் கொண்டிருக்கிறது. பெங்களூருவில் இருந்து சிவாஜி ராவாக தமிழ் நாட்டிற்கு வந்த அவரை ரஜினியாக மாற்றினார் இயக்குநர் பாலச்சந்தர். ஆரம்பத்தில் நடிகர் கமல் ஹாசன் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், பின்னர் ஹீரோவாக களம் இறங்கி, இன்று பல லட்சம் ரசிகர்களை தன் வசப்படுத்தியிருக்கிறார். 44 வருடங்களாக தமிழ் திரையுலகை ஆட்சி செய்து வரும் இவர், இதுவரை 167 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். 168-வது படத்திற்கு நேற்று பூஜை போடப்பட்டிருக்கிறது.
Rajinikanth Birthday Wishes: Happy Birthday Superstar Rajinikanth Live Coverage
Live Blog
Superstar Rajinikanth Birthday Wishes
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாள் சம்பந்தமான செய்திகளை இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.
இயக்குநர் பிரியதர்ஷன் நடிகர் ரஜினிகாந்துக்கு தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
Happy birthday superstar @rajinikanth #HappyBirthdaySuperstar pic.twitter.com/y6MvQOJguw
— priyadarshan (@priyadarshandir) December 12, 2019
சென்னை சூப்பர் கிங்ஸுக்கும், ரஜினிகாந்த்துக்கும் இடையேயான ஒற்றுமையைக் குறிப்பிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
How is it?
Super.First Day First Show,
Whistle Podu.Maanikkam,
Yellove auto.Thala vandhaa?
Singa Paadhai.Superstar Rajinikanth.
19th Over Goosebumps.#HappyBirthdaySuperstar @rajinikanth#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/nLPXDHq1nN— Chennai Super Kings (@ChennaiIPL) December 12, 2019
'மிகச்சிறந்த ஆன்மீகவாதியும் ஜனரட்ஷகமான சூப்பர்ஸ்டாருமான திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்' என பா.ஜ.க-வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, நடிகர் ரஜினிகாந்தை வாழ்த்தியுள்ளார்
மிகச்சிறந்த ஆன்மீகவாதியும் ஜனரட்ஷகமான சூப்பர்ஸ்டாருமான திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் மக்கள் பணியாற்றிட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.@rajinikanth pic.twitter.com/PInAMFrGJ2
— H Raja (@HRajaBJP) December 12, 2019
This is always the way I stand whenever I stand next to #Thalaivar. With Respect & a Feeling of disbelief that achievements as high as the Everest can meet humility as deep as the ocean :)
Happy Birthday @rajinikanth sir! :)#HBDThalaivarSuperstarRAJINI pic.twitter.com/6Y1a1jpCwA— Balaji Mohan (@directormbalaji) December 12, 2019
Happy birthday to the one & only Superstar @rajinikanth sir! 😊#HBDThalaivarSuperstarRAJINI pic.twitter.com/yS2SnqUfNI
— Nivin Pauly (@NivinOfficial) December 12, 2019
காமெடி நடிகர் சதீஷின் வாழ்த்து.
Happy birthday Thalaivaaaaaaaaa Alaways we love u 🙏🏻🙏🏻🙏🏻#காத்திருக்கிறோம் 😍😍😍 @rajinikanth Thalaiva #HBDThalaivarSuperstarRAJINI pic.twitter.com/SSYdeOePeq
— Sathish (@actorsathish) December 12, 2019
இந்திய சினிமாவின் பாட்ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்தியுள்ளார்
Happy birthday to the Baadshah of Indian cinema super star thalaivar @rajinikanth sir🙏👍😊 #HBDThalaivarSuperstarRAJINI pic.twitter.com/z7u1sAD9Rh
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) December 12, 2019
உங்கள் ஸ்டைலும், ஆஃப்ஸ்கிரீன் பணிவும் உங்களை ஒவ்வொரு ‘தர்பாரிலும்’ ‘தலைவராக்கும்’ என மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின், நடிகர் ரஜினிகாந்தை வாழ்த்தியுள்ளார்.
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் @rajinikanth Sir.
Your onscreen style and offscreen humility make you the ‘Thalaiva’ in every ‘Darbar’. pic.twitter.com/cIYZLJcjk9
— Sachin Tendulkar (@sachin_rt) December 12, 2019
எளிமையைக் கற்பிப்பவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
Gurujiiiiiiiiiiiiiiii🙏🙏🙏🙏🙏🙏🙏thalaivaaaaaaaaaaaaaaaaaaaa
Looooooooonnnnnggggggggg live to make us all ever happy energize, inspire, teach us simplicity 😍🤱🤩love you always..ennaikkum engal orey super starkku happy avadhar day💐🙏😊 #HBDSuperstarRajinikanth #HBDSuperstar pic.twitter.com/USTmnvEW0w— Actress Harathi (@harathi_hahaha) December 12, 2019
தயாநிதி அழகிரியின் வாழ்த்து.
Happy birthday thalaivaa ! ⭐️ #HBDSuperstarRajinikanth pic.twitter.com/DWQTJWUybs
— Dhaya Alagiri (@dhayaalagiri) December 12, 2019
நடிகர் சந்திரன் நடிகர் ரஜினிகாந்துக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Happy birthday the one and only superstar... #HBDThalaivarSuperstarRAJINI #HBDSuperstarRajinikanth pic.twitter.com/YZnBz2CqEd
— Chandramouli.P.S (@moulistic) December 12, 2019
பேட்ட படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்த நடிகை சிம்ரன், தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
It's a shout out time for the emperor of the masses, the man of style, @rajinikanth The Superstar of all generations is filled with Charisma, Charm, & Style! Wishing this Extraordinary personality, a very happy birthday!#HappyBirthdaySuperstar #HBDSuperstarRajinikanth pic.twitter.com/av2tkZFIuk
— Simran (@SimranbaggaOffc) December 12, 2019
தர்பார் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் வாழ்த்து.
Happy Birthday Thalaivar @rajinikanth sir.. I wish you success, health and happiness throughout. You are being a constant source of inspiration for us... I am happy and blessed to be a small part in this wonderful journey of yours.. #HBDSuperstarRajinikanth pic.twitter.com/uGWhQdf483
— A.R.Murugadoss (@ARMurugadoss) December 12, 2019
தர்பார் படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம், படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு ரஜினிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
Happy Birthday THALAIVAA @rajinikanth 😎🎁🎉🎊 wishes from @LycaProductions & team #DARBAR 👑#Thalaivar #Superstar @ARMurugadoss #Nayanthara @anirudhofficial @santoshsivan @sreekar_prasad @SunielVShetty @i_nivethathomas #HBDThalaivarSuperstarRAJINI #HBDSuperstarRajinikanth pic.twitter.com/Vpl1PdDygl
— Lyca Productions (@LycaProductions) December 11, 2019
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா. தர்பார் படத்தில் உங்களுடன் பணியாற்றியது எனது கரியரின் மிகப் பெரிய உயரம் என நடிகர் சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
Happy bday Thalaivaa @rajinikanth!! Working with you on #Darbar has been one of the biggest highs of my career and the lessons in humility, discipline & simplicity shall remain with me for life! May god bless you Sir with lots of love health & happiness.#HappyBirthdayRajinikanth pic.twitter.com/SZ8Y3QfVMi
— Suniel Shetty (@SunielVShetty) December 12, 2019
நடிகர் ரஜினிகாந்துக்கு அவரது 44 ஆண்டு திரையுலக நண்பர் நடிகர் கமல் ஹாசன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அன்பர் நண்பர் திரு. @rajinikanth - க்கு நல் ஆரோக்கியமும், வெற்றியும் பல்லாண்டு தொடர இந்நாளில் வாழ்த்துகிறேன்.
உங்கள் நான்.— Kamal Haasan (@ikamalhaasan) December 12, 2019
'ஹேப்பி பர்த் டே தலைவா’ என நடிகரும், ரஜினியின் மூத்த மருமகனுமான தனுஷ் தெரிவித்துள்ளார்.
Happy birthday #thalaiva 🙏🙏🙏
— Dhanush (@dhanushkraja) December 12, 2019
நீங்கள் எப்போதும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகள் என கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
Wishing a very happy birthday to superstar @rajinikanth. May you always stay blessed & healthy.
— Suresh Raina🇮🇳 (@ImRaina) December 12, 2019
இந்த கிரகத்தில் உங்களைப் போல் மற்றொரு நபர் இருக்க முடியாது! நீங்களே தான் பொறந்து வரணும்” என இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.
Naanga ellarum love u 30000💖Thalaivaa👑forever &ever& ever.. there can never be another person like u in this planet! Neengaley dhaan porandhu varanum 🤗🥳🥰
SuperStar💥anaivarukkum piditha nalla Aathma😇
Please God make him live Forever
Happy birthday @rajinikanth sir😍😇 pic.twitter.com/cB54GH0Dtk
— Vignesh Shivan (@VigneshShivN) December 12, 2019
நல்ல உடல் மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ ரஜினியை வாழ்த்தி மகிழ்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு இதயமார்ந்த, பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல உடல் - மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்.#HappyBirthdayRajinikanth
— M.K.Stalin (@mkstalin) December 12, 2019
இந்த உலகத்திலேயே நான் அதிகம் நேசிப்பவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
Happy birthday to the person I love the most in this world 🥳🥳🥳
Andrum Indrum Endrum Orey Superstar @rajinikanth 🙏🏻🙏🏻🙏🏻#HBDThalaivarSuperstarRAJINI 🤘🏻🤘🏻🤘🏻 pic.twitter.com/kmTWXaEQ0Z— Anirudh Ravichander (@anirudhofficial) December 11, 2019
நடிகர் ரஜினிகாந்துக்கு பிக்பாஸ் டைட்டிலை வென்ற முகென் ராவ், தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Happy Birthday to my Thalaivar. My Idol. My Love. My source of Motivation. I wish you loads and loads of joy and success sir. The Epitome of Style and Success. The love we all have on you is immeasurable. Love you thalaivaa😘😘♥️ @rajinikanth#HBDThalaivarSuperstarRAJINI pic.twitter.com/eYOn8dlC9m
— Mugen Rao (@Mugen_Rao_Offl) December 12, 2019
70, 80, 90, 2000 என கடந்த 40 வருடங்களில் பிறந்த அனைவருமே ரஜினியின் ரசிகர்கள்
Phhaaaa!! Whoever created this!! Pakka!! Summery of Kollywood explain in one pic! Thalaivar da!!!#HBDThalaivarSuperStarRAJINIpic.twitter.com/DwVM7kUg0Q
— Komban (@Banned_tweeter) December 12, 2019
எனது வாழ்க்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என லதா ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
Happy Birthday My Life😍😍#HBDThalaivarSuperstarRAJINI #HBDSuperstarRajinikanth #HappyBirthdayThalaiva pic.twitter.com/lujbEofd8Z pic.twitter.com/1paAP6eaEM
— Latha Rajinikanth (@Latharajnikant) December 11, 2019
குழந்தை பருவத்திலிருந்தே உங்களை ரசித்து, உங்களுடைய ஒவ்வொரு செயலிலும் ஈர்க்கப்பட்ட மில்லியன் கணக்கான ரசிகர்களில் நானும் ஒருத்தி. ஒரு முறை உங்களை சந்தித்து பேச காத்திருக்கிறேன் என்று நடிகை பார்வதி நாயர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Happy Birthday Superstar @rajinikanth sir. Am one of the millions of fans who have adored u from childhood and get inspired from every action of yours. Waiting to meet & talk to u once. Live long with all love & success sir. #HBDThalaivarSuperstarRAJINI #HappyBirthdaySuperstar pic.twitter.com/DfiK56KZok
— Parvati (@paro_nair) December 12, 2019
நேற்று தலைவர் 168 படத்துக்கு பூஜை போடப்பட்டது. ரஜினி நடிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அதோடு ரஜினிகாந்தின் பிறந்தநாளையும் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார்கள் படக்குழுவினர்.
Happy Birthday Superstar @rajinikanth!#HBDThalaivarSuperstarRAJINI pic.twitter.com/dWg8nou2V5
— Sun Pictures (@sunpictures) December 11, 2019
இந்திய சினிமாவின் பெருமைக்குரியவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் ஹேண்டிலில் பதிவிட்டுள்ளது.
Wishing the pride of Indian Cinema, the one and only Superstar @rajinikanth a very Happy Birthday!#HBDSuperstarRajinikanth #HappyBirthdaySuperstar #HBDThalaivarSuperstarRAJINI #HappyBirthdayRajinikanth #HBDRajiniKanth pic.twitter.com/euwYV4Pqsn
— Sun Pictures (@sunpictures) December 12, 2019
ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில், #HBDThalaivarSuperstarRAJINI என்ற ஹேஷ் டேக் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights