Superstar Rajinikanth's Car Collections: நடிப்புத் துறையில் இருக்கும் பல நடிகர்களின் பின்னால் பல்வேறு கடினமான பக்கங்கள் இருக்கின்றன. மிகச் சிலர் தாங்கள் நடிக்க வந்ததிலிருந்து அவர்கள் ஓய்வு பெறும் வரை உச்சத்தில் இருக்கிறார்கள். அத்தகைய வகையில் குறிப்பிடத் தகுந்த ஒரு பெயர் ரஜினிகாந்த்.
Advertisment
திமுக கூட்டணி சார்பில் CAAவை எதிர்த்து பேரணி...
பிரீமியர் பத்மினி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1980 களின் முற்பகுதியில் வாங்கியது இந்த பத்மினி கார். அதை முதலிடத்தில் பராமரித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. 1.1 லிட்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படும் பத்மினி இப்போது நாட்டில் அரிதான ஒன்றாகும்.
இந்துஸ்தான் மோட்டார்ஸ் அம்பாஸிடர்: இங்கிலாந்தில் மோரிஸ் மோட்டார்ஸ் லிமிடெட் தயாரித்த பழைய ஆக்ஸ்போர்டு தொடர் III மாடலின் அடிப்படையில், அம்பாஸிடர் பல்லாண்டுகளாக இந்தியாவில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
ஹோண்டா சிவிக்: சிவிக் பல ஆண்டுகளாக இந்தியாவில் மோட்டார் ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக விளங்குகிறது. சில காலம் உற்பத்தியில்லாமல் இருந்தது, இப்போது புதிய அவதாரத்தில் மீண்டும் வரவிருக்கிறது. 1.8 லிட்டர் ஐ-விடிஇசி எஞ்சின் மூலம் இயங்கும் பழைய தலைமுறை சிவிக் 130 பிஹெச்பி ஆற்றலை கொண்ட காரை வைத்திருக்கிறார் ரஜினிகாந்த்.
டொயோட்டா இன்னோவா: ஜப்பானிய உற்பத்தியான இந்த கார், கம்ஃபர்டபிள் போன்ற காரணங்களுக்காக அதிகம் விற்கப்படும் கார்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளது. 2.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கூடிய முந்தைய தலைமுறை டொயோட்டா இன்னோவாவை உச்ச நட்சத்திரம் பயன்படுத்துகிறார்.
பிஎம்டபிள்யூ எக்ஸ் 5: எக்ஸ் 5 ஐந்து அல்லது ஏழு இருக்கைகள் உள்ளமைப்பில் வருகிறது. ரஜினியின் சேகரிப்பில் இருக்கும் இந்த கார் சன் ரூஃபுடன் கூடிய சிறந்த ஸ்பெக் மாடலாகும். எக்ஸ் 5, 3.0 லிட்டர் இன்லைன் ஆறு சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
மிகவும் ஆடம்பரமான கார் வகைகளில், ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-கிளாஸ், ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ஆகியவற்றையும் நடிகர் ரஜினி வைத்திருக்கிறார்.