darbar, rajinikanth darbar, superstar rajinikanth, superstar rajini, ar murugadoss rajinikanth, rajinikanth movie, darbar movie update, rajini ar murugadoss movie, தர்பார், ரஜினிகாந்த், ஏ.ஆர்,முருகதாஸ்
Super Star Rajinikanth: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பேட்ட’ திரைப்படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரொம்ப வருடங்கள் கழித்து, ரஜினிகாந்த் ஐ.பி.எஸ் அதிகாரியாக நடிப்பதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கிடையே போலீஸ் – தாதா என 2 கதாப்பாத்திரங்களில் ரஜினி நடிப்பதாகவும், அதில் தாதா கேரக்டரின் மகளாக நிவேதா ஜோசப் நடிப்பதாகவும், போலீஸ் ரஜினிக்கு ஜோடி தான் நயன்தாரா என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தர்பார் படத்தைப் பற்றி அறிவிப்பு ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதைக் கண்டதும், அந்த அறிவிப்பு ஃபர்ஸ்ட் எதைப் பற்றியதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும், அதைத் தெரிந்துக் கொள்ளும் ஆர்வமும் ரஜினி ரசிகர்களை தொற்றியது.
இந்நிலையில் தற்போது அந்த சுவாரஸ்ய முடிச்சு அவிழ்க்கப்பட்டிருக்கிறது. அதாவது நடிகர் ரஜினிகாந்தின் ஹெச்.டி போட்டோக்களும், தர்பார் டைட்டில் டிசைனும் 7 மணிக்கு வெளியாகும் தகவலை தெரிவித்திருக்கிறார் முருகதாஸ். அதோடு, கிரியேட்டிவாக ரசிகர்கள் டிஸைன் செய்யும் போஸ்டர்கள், சிறந்த போஸ்டராக தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.