Siva’s Next with Rajinikanth: வதந்திகள் உண்மையானால், ‘விஸ்வாசம்’ படத்தை இயக்கிய சிவாவுடன், இணைவார் நடிகர் ரஜினிகாந்த். ஒரு மெகா பட்ஜெட்டில் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படும் தலைவர் 168 திரைப்படம் கிராமப்புறத்தை மையப்படுத்திய பொழுதுபோக்கு படமாக இருக்கும். ஏனென்றால் இதில் சிவா படு ஸ்ட்ராங். ”சூப்பர் ஸ்டார் தனது படங்களில் பி மற்றும் சி மையங்களுக்கு விருந்து படைத்து, சில காலமாகிவிட்டது. ஸ்கிரிப்டுகளின் இறுதி வடிவம் இன்னும் உண்டாக்கப்படவில்லை” என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், சிவா போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை சந்தித்து சுமார் நான்கு மணி நேரம் ஸ்கிரிப்டை விவரித்தார். “தலைவரை சந்தித்ததில் சிவா உற்சாகமாக இருந்தார், அந்த அமர்வு மிகவும் சிறப்பாக இருந்தது” எனவும் அந்த வட்டாரம் தெரிவித்தது. அதோடு, “விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” எனவும் அந்த வட்டாரம் தெரிவித்தது.
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது அடுத்த படமான ”தர்பார்” படப்பிடிப்பை தற்போது முடித்துள்ளார். இது அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த அக்டோபர் 4-ம் தேதி சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள தர்பார் படத்தை, ”லைகா புரொடக்ஷன்ஸ்” தயாரித்துள்ளது. “தர்பாரில் அரசியலைப் பற்றி விவாதிக்கவில்லை என்றும், இது தனது கனவு படம் என்றும், அனைத்து வயது ரஜினி ரசிகர்களையும் மகிழ்ச்சிப் படுத்தும் மாஸ் எண்டெர்டெயினராக இப்படம் உருவாகியுள்ளது” எனவும் முருகதாஸ் தெரிவித்திருக்கிறார்.