Lokesh Kanagaraj Meets Rajinikanth : 'கைதி' திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடந்த திங்கட்கிழமை மாலை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரின் போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்த செய்தி வெளிவந்ததை அடுத்து கோலிவுட் வட்டாரம் பரபரப்பான நிலையில் உள்ளது.
Advertisment
2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், இருவரும் சேர்ந்து ஒரு படம் குறித்து விவாதித்திருக்கலாம் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2017-ம் ஆண்டில் வெளியான லோகேஷ் கனகராஜின் மாநகரம் படத்தைப் பார்த்த ரஜினி, உடனே அவரை நேரில் அழைத்துப் பாராட்டியிருந்தார்.
அடுத்தப் படமான கைதியிலும் தன்னை நிரூபித்த லோகேஷ், தற்போது விஜய்யின் ‘தளபதி 64’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து சூர்யா, கார்த்தி, கமல் ஹாசன் ஆகியோரின் படங்களுக்கும் கமிட் ஆகியிருக்கிறார் லோகேஷ். இதற்கிடையே ரஜினியுடன் இணைவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.
Advertisment
Advertisements
மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?
மறுபுறம் ‘தர்பார்’ படத்தை நிறைவு செய்த ரஜினிகாந்த், அடுத்ததாக சிறுத்தை சிவாவின் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இதனை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் ரஜினி தனது பிறந்த நாளை நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் முன்கூட்டியே கொண்டாடியதாகவும், அதில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.