/tamil-ie/media/media_files/uploads/2022/12/New-Project6.jpg)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 12-ம் தேதி தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடினார். உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். ஏராளமான படங்களில் நடித்து தனக்கு என தனி ரசிகர்பட்டாளத்தை கொண்டவர். 80களில் தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத நடிகராக வளர்ந்தார். ஸ்டைல், நடிப்பு, வசனத்தால் ரசிகர்களை ஈர்த்தார். இன்றும் அதே ஸ்டைலோடு ரசிகர்களை ஈர்த்து வருகிறது. தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியது.
இந்நிலையில், ரஜினிகாந்த் ஆன்மீகத்தின் மீது ஈர்ப்பு கொண்டவர். நேற்று இரவு மகள் ஐஸ்வர்யாவுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா இருவரும் நேற்று திருமலைக்கு வந்தனர். திருமலையில் உள்ள டி.எஸ் ஆர் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினர். இன்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோயிலுக்கு வந்த ரஜினியை தேவசம் போர்டு செயல் அதிகாரி தர்மா ரெட்டி வரவேற்றார்.
சாமி தரிசனம் செய்தப் பின் ரஜினிக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டு பண்டிதர்கள் வேத ஆசீர்வாதம் செய்தனர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, "6 வருடம் கழித்து ஏழுமலையானை தரிசனம் செய்தது திவ்ய அனுபவமாக இருந்தது. அமைச்சராக பதவியேற்ற உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தேன்" என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.