/tamil-ie/media/media_files/uploads/2019/12/Rajinikanth-Birthday.jpg)
Rajinikanth Birthday
Rajinikanth Star Birthday Celebration : தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது நடிப்பாலும், ஸ்டைலாலும், மாஸாலும் லட்சக் கணக்கான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ’சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்’ என்ற பாடல் கணக்கச்சிதமாகவே அவருக்குப் பொருந்துகிறது. அதன் படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரஜினியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.
இந்நிலையில் வரும் டிசம்பர் 12-ம் தேதியன்று தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் ரஜினி. கூடவே அந்நாளை அமர்க்களப் படுத்த ரஜினி ரசிகர்களும் தயாராகி வருகிறார்கள். இதற்கிடையே தனது நட்சத்திர பிறந்தநாளைக் தன்னுடைய குடும்பத்தினருடன் கொண்டாடினார் ரஜினிகாந்த். மனைவி லதா ரஜினிகாந்த், மூத்த மகள் செளந்தர்யா, மருமகன் தனுஷ், பேரக் குழந்தைகள் யாத்ரா, லிங்கா, வேத், மைத்துனர் ரவிச்சந்தர் உள்ளிட்ட ரஜினியின் குடும்பத்தினர் அந்த பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொண்டு, ரஜினி ஆரோக்கியத்துடன் வாழ சிறப்புப் பூஜை செய்தனர். அந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2019/12/ELGil0xU8AAYW-l.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/12/ELHsSi3VAAAICcG-1024x768.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/12/ELHsSi1UwAAYnHB.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/12/ELHsSi2UcAA6Lyh.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/12/ELGilY_VUAAkMVe.jpg)
தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் ‘தர்பார்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, பிரதீக் பப்பர் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அதோடு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்திலும் கமிட்டாகியிருக்கிறார் ரஜினி!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.