குடும்பத்தினருடன் தனது நட்சத்திர பிறந்தநாளைக் கொண்டாடிய ரஜினிகாந்த் – படங்கள் உள்ளே

Rajinikanth Star Birthday Celebration : தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது நடிப்பாலும், ஸ்டைலாலும், மாஸாலும் லட்சக் கணக்கான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ’சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்’ என்ற பாடல் கணக்கச்சிதமாகவே அவருக்குப் பொருந்துகிறது. அதன் படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரஜினியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. இந்நிலையில் வரும் டிசம்பர் 12-ம் தேதியன்று தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் ரஜினி. கூடவே அந்நாளை அமர்க்களப் […]

Rajinikanth Birthday
Rajinikanth Birthday

Rajinikanth Star Birthday Celebration : தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது நடிப்பாலும், ஸ்டைலாலும், மாஸாலும் லட்சக் கணக்கான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ’சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்’ என்ற பாடல் கணக்கச்சிதமாகவே அவருக்குப் பொருந்துகிறது. அதன் படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரஜினியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.

இந்நிலையில் வரும் டிசம்பர் 12-ம் தேதியன்று தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் ரஜினி. கூடவே அந்நாளை அமர்க்களப் படுத்த ரஜினி ரசிகர்களும் தயாராகி வருகிறார்கள். இதற்கிடையே தனது நட்சத்திர பிறந்தநாளைக் தன்னுடைய குடும்பத்தினருடன் கொண்டாடினார் ரஜினிகாந்த். மனைவி லதா ரஜினிகாந்த், மூத்த மகள் செளந்தர்யா, மருமகன் தனுஷ், பேரக் குழந்தைகள் யாத்ரா, லிங்கா, வேத், மைத்துனர் ரவிச்சந்தர் உள்ளிட்ட ரஜினியின் குடும்பத்தினர் அந்த பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொண்டு, ரஜினி ஆரோக்கியத்துடன் வாழ சிறப்புப் பூஜை செய்தனர். அந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

Happy Birthday Superstar Rajinikanth, Rajinikanth's star birthday celebration
ரஜினியின் நட்சத்திர பிறந்தநாள்

Happy Birthday Superstar Rajinikanth, Rajinikanth's star birthday celebration
பிறந்தநாள் சிறப்புப் பூஜை

Happy Birthday Superstar Rajinikanth, Rajinikanth's star birthday celebration
மகிழ்ச்சியான தம்பதிகள்…

Happy Birthday Superstar Rajinikanth, Rajinikanth's star birthday celebration
ரஜினியின் பிறந்தநாள் விழாவில் ஐஸ்வர்யா-தனுஷ்

Happy Birthday Superstar Rajinikanth, Rajinikanth's star birthday celebration
குழந்தைகளுடன் அனிருத்தின் அப்பா ரவிச்சந்தர்

தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் ‘தர்பார்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, பிரதீக் பப்பர் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அதோடு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்திலும் கமிட்டாகியிருக்கிறார் ரஜினி!

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Superstar rajinikanth star birthday celebration photos

Next Story
உள்ளுக்குள்ள இவ்ளோ பாசம் இருக்கு… அத கொஞ்சம் வெளில காட்டுனா தான் என்னவாம்…Pandian Stores Mullai Kathir
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com