/tamil-ie/media/media_files/uploads/2018/01/a171.jpg)
'கபாலி' படத்தைத் தொடர்ந்து, பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 'காலா'. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில், ரஜினி ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்கிறார். நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
சென்னை, மும்பை பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது ‘காலா’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம் பெற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் டப்பிங் பேசி விட்டார்கள்.
ரஜினியின் டப்பிங் மட்டும் பாக்கி இருந்தது. இந்த நிலையில், ரஜினி இன்று காலா படத்தின் டப்பிங்கை பேச ஆரம்பித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
More pics of @superstarrajini dubbing at #KnackStudios for #Kaalapic.twitter.com/M79Hnl3aeq
— Ramesh Bala (@rameshlaus) 21 January 2018
. @superstarrajini at #KnackStudios dubbing for #Kaalapic.twitter.com/YtWbnPKv9I
— Ramesh Bala (@rameshlaus) 21 January 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us