/indian-express-tamil/media/media_files/2025/08/14/screenshot-2025-08-14-123133-2025-08-14-12-33-01.jpg)
தமிழ் மக்களை எளிதில் சென்றடையக்கூடிய விஷயமாக இருப்பது, ஊடகம் (மீடியா) மட்டுமே. முன்னர், பெரிய பெரிய நடிகர்கள்-நடிகைகளை கூட அவ்வளவு எளிதில் பார்த்து விட முடியாது.
ஆனால், தொலைக்காட்சியில் தொகுப்பாளர்களாக இருப்பவர்களை எளிதில் ரீச் செய்து விடலாம். இப்போது நிலை வேறு. பல காலங்களாக தொலைக்காட்சியில் ஸ்டார் தொகுப்பாளர்களாக இருப்பவர்கள், அதன் பிறகு நடிப்பு-சினிமா என வேறு பக்கம் சென்று விடுகின்றனர்.
வெறும் கோபிநாத் என பெயரை வைத்து சொன்னால், பிறருக்கு இவரை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். ஆனால், நீயா நானா கோபிநாத்துக்கு அறிமுகமே தேவை இல்லை. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
அதற்கு முன்பு ஜெயா டிவி உட்பட ஒரு சில சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். ஆனால் நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களுக்கும் பிரபலமாக மாறி இருக்கிறார்.
அதுபோல நீயா நானா நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு இவருக்கு ஒரு சில திரைப்படங்களிலும் நடிக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவருடைய தனித்துவமான குரல் இவருக்கு பிளஸ் பாயிண்ட் ஆக இருக்கிறது.
அதுபோல கோட் போட்ட நாட்டாமையாக இரண்டு தரப்பு நியாயத்தையும் கேட்டு இவர் பதில் சொல்லும் விதமும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நீயா நானா நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கோபிநாத் தான் இருந்து வருகிறார்.
இவரது ஸ்டைலே கோட் அணிந்து கொண்டு, எவ்வளவு பெரிய டாப்பிக்காக இருந்தாலும் அதை ஒரு ஆரோக்கியமான விவாதமாக கொண்டு செல்வதே ஆகும். இவர் எங்காவது கோட் அணியாமல் சென்றால், “ஐயோ கோபிநாத்துக்கே கோட் இல்லையா?” என்று கலாய்ப்பதும் உண்டு.
நெறியாளராக இருந்த இவர், சுமார் 19 வருடங்களாக ‘நீயா நானா’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவர், இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஆவதற்கு முன்பு, செய்தி வாசிப்பாளராக இருந்திருக்கிறார்.
சமீபத்தில் நடந்த 'கூலி' திரைப்பட ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் மேடையில் பேசியபோது இயக்குனர் லோகேஷ் 2 மணி நேரம் கொடுத்த நேர்காணலை பற்றி அவரை கிண்டல் செய்யும் விதமாக வேடிக்கையாக சிரித்து பேசினார்.
அப்போது அந்த நேர்காணலை தொகுத்து வழங்கிய கோபிநாத்தை பற்றி "அவர் ஒரு பிரில்லியண்ட்டான அங்கர், அவரது கேள்விகள் மிகவும் அருமையாக இருக்கும். கோட் போட்டு வந்தார் என்றால் 60 பேர் இருந்தால் கூட சமாளித்துவிடுவார்" என்று பாராட்டியுள்ளார்.
"என்னிடம் ஒரு 5 வருடங்களாக நேர்காணலுக்கு கேட்கிறார்கள், நான் சத்தியமாக கொடுக்க மாட்டேன்" என்று சிரிப்புடன் கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள 'கூலி'. இந்த படத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.