பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாராக மாறிய ரஜினியைத்தான் உலகம் அறியும். ஆனால் அவரது இளவயதில், வறுமை அவரை வாட்டி வதைத்தது. எப்படியாவது பணக்காரனாகி விடவேண்டும் என்ற எண்ணத்தில் தான் சினிமாவுக்கு வந்ததாக ரஜினியே பலமுறை மேடையில் சொல்லியிருக்கிறார்.
ரனியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து அப்படி ஒன்றும் அவருக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை. ரஜினி ஆவதற்கு முன், சிவாஜி ராவ் ஒரு சாதரண மேடை நாடக நடிகராகத் தான்’ தன் வாழ்க்கையைத் தொடங்கினார். நடிப்பின் மீது அவருக்கு இருந்த அதீத நாட்டம்தான்’ 70களின் தொடக்கத்தில் சிறிய மேடை நடிகராக இருந்த அவரை மெட்ராஸ் வரை கொண்டு வந்தது.
1975ல் கமல்ஹாசன் நடிப்பில் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் சிறிய வேடத்தில் ரஜினிகாந்த் அறிமுகமானார்.
தன்னால் ஹீரோவாக முடியாது, எனவே சாதரண வில்லன் வேடம் கூட கிடைத்தால் போதும் என்கிற எண்ணத்தில் தான் ரஜினி இருந்தார். அப்போதுதான் முதல்முறையாக ரஜினி ஹீரோவாக நடித்து, வெளிவந்த பைரவி’ படம் வசூல் சாதனை படைத்தது. அந்த வெற்றியிலிருந்து தான், ரஜினியுடன் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தும் சேர்ந்து கொண்டது. அன்றிலிருந்து’ நான்கு தசாப்தங்களை கடந்தும் தமிழ் சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டாராக ரஜினி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
அப்படி, 1995-ம் ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் பாஷா படம் வெளியானது. தொண்ணூறுகளில் பாஷா படம் தமிழ் சினிமாவில்’ ஒரு டிரெண்ட் செட்டராக இருந்தது. ஹீரோவை ‘எதிர்மறை’ பாத்திரத்தில் காட்டிய பல படங்களில் இது முதன்மையானது. இப்படம் 368 நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்து மாபெரும் வெற்றி பெற்றது. தெலுங்கு மற்றும் இந்தியில் ரஜினிகாந்துக்கு மார்க்கெட் உருவாவதற்கும் இப்படம் முக்கிய காரணமாக இருந்தது.
தமிழ்நாட்டின் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார், ஒரே இரவில் பிரபலமடைந்தார். தேசிய கீதம் போல’ ஆட்டோக்காரன் பாடல், ஆட்டோ டிரைவர்களின்’ ஆட்டோ அந்தம் ஆனது. ‘நா ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி!’ என்ற அவரது பஞ்ச் வசனம் எத்தனை காலத்துக்கும் அழியாதது.
இந்நிலையில்’ 90களில் ஆட்டோக்காரன் பாடலுக்கு ரஜினி ஆடும் வீடியோ ஒன்று, இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
1995-இல் சிங்கப்பூரில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில், மேடையில் தோன்றிய ரஜினி’ ஆட்டோக்காரன் பாடலுக்கு நடனமாடினார். அந்த வீடியோவை நாய்ஸ் அன்ட் கிரேய்ன்ஸ் நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
சுமார் 27 ஆண்டுகள் பழமையான இந்த வீடியோவை, டிஜிட்டல் மான்ஸ்ட்ரீங் முறையில் ஒலிக்கலவை செய்து’ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போக, இப்போது இணையத்தில் டிரென்டாகி வருகிறது.
மேலும் சிங்கப்பூர் விழாவில் ரஜினி பேசியதையும் வெளியிட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“