பிக் பாஸ் போட்டியாளர்கள் + குக் வித் கோமாளி பிரபலங்கள்; சக்ஸ் லீக் செய்த புகைப்படங்கள்!
பிக் பாஸ் சீசன் 4 மற்றும் குக் வித் கோமாளி பிரபலங்கள் ஒன்றாக சந்தித்துக்கொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்ர்வர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களும் குக் வித் கோமாளி சீசன் 2 பிரபலங்களும் ஒன்றாக சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்ரவர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Advertisment
விஜய் டிவியில் ஒளிபரபான ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் எல்லா தரப்பட்ட ரசிகர்களையும் ஈர்த்து மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ரேகா, பாடகர் வேல் முருகன், ஷிவானி, கேப்ரியல்லா, ஆரி, பாலாஜி, நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். இதில், ஆரி பிக் பாஸ் டைட்டிலை வென்றார். பிக் பாஸ் 4 சீசன் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்ரவர்த்தி சக போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியாளராக இருந்தார். ரசிகர்கள் அவருடைய பெயரை சுறுக்கி செல்லமாக சக்ஸ் என்று அழைத்தனர்.
அதே போல, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, 2வது சீசன் தொடங்கப்பட்டது. 2வது சீசனில் அஷ்வின், பவித்ரா லட்சுமி, ஷகிலா, கனி, பாபா பாஸ்கர், புகழ், ஷிவாங்கி, தங்கதுரை, சுனிதா, மணிமேகலை உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் நிறைவடைகிறது.
குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலங்களும் ஒன்றாக சந்தித்து கொண்டாடியுள்ளனர். பிக் பாஸ் பிரபலங்கள் அனிதா சம்பத், ஷிவானி, கேபிரியல்லா, ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி, ரமேஷ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ், பவித்ரா லட்சுமி, கனி, அஷ்வின், ஷகிலா ஆகியோர் ஒன்றாக சந்தித்து கொண்டாடி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 4 மற்றும் குக் வித் கோமாளி பிரபலங்கள் ஒன்றாக சந்தித்துக்கொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்ர்வர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது. ஆனால், பிக் பாஸ் சீசன் 4 மற்றும் குக் வித் கோமாளி பிரபலங்கள் எதற்காக சந்தித்துக்கொண்டனர். என்ன பார்ட்டி என்று தகவல் வெளியாகவில்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"