தமிழ் திரைத் துறையில் அஜித், சூர்யா இருவரும் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில், இரு முன்னணி நடிகர்களின் படமும் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டர்கள் ரிலீசாகி வரவேற்பு பெற்றது. எனினும் இன்னும் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய தகவல் வெளியாக வில்லை. பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதே நேரம், சூர்யா கங்குவா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது சூர்யாவின் 44-வது படமாகும். படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இப்படமும் பொங்கல் பண்டிகையை குறிவைக்கலாம் எனத் தெரிகிறது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“