கும்பளாங்கி நைட்ஸ் டூ மஞ்ஞுமல் பாய்ஸ் வரை... சூர்யா 45 படத்துக்கு இவர்தான் மியூசிக்!

மலையாள சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான இசை அடையாளத்தை உருவாக்கியுள்ள சுஷின், இதற்கு முன் "கும்பளாங்கி நைட்ஸ்", "மஞ்சுமல் பாய்ஸ்", "ஆவேஷம்" போன்ற பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மலையாள சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான இசை அடையாளத்தை உருவாக்கியுள்ள சுஷின், இதற்கு முன் "கும்பளாங்கி நைட்ஸ்", "மஞ்சுமல் பாய்ஸ்", "ஆவேஷம்" போன்ற பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Screenshot 2025-08-20 165011
நடிகர் சூர்யா தற்போது தனது 47வது திரைப்படத்திற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளார் என்பதற்கான புதிய தகவல்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.
இப்போது சூர்யா "கருப்பு" எனும் தலைப்பில் உருவாகியுள்ள படத்தின் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து, அவர் இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் உருவாகும் மற்றொரு படத்தில் நடித்து வருகிறார்.
இதுவே சூர்யாவின் 46வது படம் எனக் கருதப்படுகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் முதல்-look போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
அந்த போஸ்டர் அவர் இந்த படத்தில் எப்படியொரு வேடத்தில் தோன்ற போகிறார் என்பதை குறிப்பாகக் காட்டாமல் இருந்தாலும், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தற்போது வெளியாகும் தகவல்களின் படி, சூர்யா அடுத்ததாக "ஆவேஷம்" படத்தின் இயக்குநராக இருந்த ஜித்து மாதவனுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.
இந்த புதிய கூட்டணிக்கான திட்டங்கள் தீவிரமாக நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் சூர்யா ஒரு காவல்துறை அதிகாரியாகும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது சூர்யாவின் திரைப்பயணத்தில் ஒரு வித்தியாசமான கட்டமாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த புதிய திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக பிரபல மலையாள இசை இயக்குனர் சுஷின் ஷியாம் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மலையாள சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான இசை அடையாளத்தை உருவாக்கியுள்ள சுஷின், இதற்கு முன் "கும்பளாங்கி நைட்ஸ்", "மஞ்ஞுமல் பாய்ஸ்", "ஆவேஷம்" போன்ற பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

Screenshot 2025-08-20 165325

அவரது இசை, படங்களின் உணர்வுப் பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா – ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகவிருக்கும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இதன் மூலம் சூர்யாவின் ரசிகர்களிடையே ஏற்கனவே உருவாகியுள்ள எதிர்பார்ப்பு மேலும் பல மடங்கு அதிகரிக்கக் கூடும். சூர்யா–ஜித்து கூட்டணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் அதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: