என் அண்ணன் தயாரித்த படம்.... மேடையில் உருகிய கார்த்தி!

  சிறு வயதில் களைப்பாக இருக்கிறது என்றால் அக்கா காப்பி கொடுப்பார். ஆனால் அண்ணன் உதை கொடுப்பார்.

நடிகர் கார்த்தி மற்றும் சூர்யா இருவரும் கடைக்குட்டி சிங்கம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்  உருக்கமான பல தகவல்களை   மனம் திறந்து பேசியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர்  ஒரே நேரத்தில்  உச்சபட்ச நடிகர்களாக இருக்கிறார்கள் என்றால் அவர்கள் சூர்யா  – கார்த்தி  தான்.   அண்ணன் தம்பிகளான இவர்கள் இருவரும் எந்த இடத்திலும் ஒருவரையொருவர்  விட்டுக் கொடுத்தது இல்லை, அதே போல்  இருவரின் படமும்  வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும்  கலவையான பல கருத்துக்களை சந்தித்த போதும் ரசிகர்களுக்கு இவர்கள் இருவர் மீது இருக்கும் ஈர்ப்பு  இன்று வரை குறையவில்லை.

சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் திரைப்படமும்,  சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தான் கார்த்தி  இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா  நேற்று பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இதில்  நடிகர் சூர்யாவும் கார்த்தில் மனதிற்கு நெருக்கமான பல தகவல்களை வெளிப்ப்டையாக பகிர்ந்துள்ளனர்.  இருவரும் ஒன்றாக மேடை ஏறினர். முதலில் பேசிய கார்த்தி,  “ முதலில் என் அண்ணன் சூர்யா இந்த படத்தை தயாரிப்பார் என்று நான் நினைக்கவேயில்லை.  அண்ணனுடன் நான் இணைந்து இருப்பது இதுவே முதன் முறை.  சிறு வயதில் களைப்பாக இருக்கிறது என்றால் அக்கா காப்பி கொடுப்பார். ஆனால் அண்ணன் உதை கொடுப்பார். ஆனால் பாசக்கார அண்ணா வெளியில் காட்டுக் கொள்ளமாட்டார்.

என்னை வைத்து எனது அண்ணன் தயாரித்துள்ள இந்த படம் லாபம் ஈட்டி கொடுக்க வேண்டும் . இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை உள்ளது. அந்த வாய்ப்பு விரைவில் அமையும் என்று நம்புகிறேன். அதற்காக காத்து இருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

அதன் பின்பு மைக் பிடித்த நடிகர் சூர்யா கார்த்தி குறித்து நெகிழ்வான பகிர்ந்துக் கொண்டார். “ நானும் கார்த்தியும் குழந்தையாக இருக்கும் போது சத்யராஜ் மாமா, அவர் வாங்கிய முதல் சம்பளத்தில் எனக்கும் கார்த்திக்கும் இனிப்பு வாங்கி தந்து சர்ப்பிரைஸ் எல்லாம் தந்துள்ளார். ஆனால்  இப்போது சத்யராஜ் மாமா கார்த்தியுடன் நடிக்கும் படத்தை நாங்கள் தயாரித்துளோம். இது எங்களுக்கு வாழ்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு. தம்பி கார்த்தி உடன் சேர்ந்து நடிக்க எனக்கும் ஆசை தான். அதற்கான வாய்ப்பு சீக்கிரத்தில் அமையும் என்று நம்புகிறேன். ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.

 

×Close
×Close