Advertisment

ஒரு காட்சிக்காக 26 டேக் வாங்கிய சூர்யா: மணிரத்னம் படத்தில் நடந்த சம்பவம்; சுதா கொங்கரா தகவல்

சூரரைப் போற்று மற்றும் அதன் இந்தி ரீமேக்கான சர்ஃபிரா படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா சமீபத்தில் சூர்யாவுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

author-image
WebDesk
New Update
Surya Sudha Kongara

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா

கடந்த 2010-ம் ஆண்டு விஷ்ணு விஷால், ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. தொடர்ந்து 2016-ம் ஆண்டு மாதவன் நடிப்பில் இறுதிச்சுற்று, புத்தம் புது காலை ஆந்தாலஜி படத்தில் "இளமை இதோ இதோ" என்ற பிரிவை இயக்கிய சுதா கொங்கரா பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தார்.

Advertisment

Read In English : Suriya did 26 takes for a shot in Aayutha Ezhuthu even after director Mani Ratnam’s early approval: ‘He always asks for more’

அதன்பிறகு கடந்த 2020-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று, பாவா கதைகள் (2020) என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் "தங்கம்" என்ற பகுதியை இயக்கிய சுதா கொங்கரா, 4 வருட இடைவெளிக்குப் பிறகு, சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்காக அக்ஷய் குமார் நடித்த சர்ஃபிரா படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த வாரம் வெளியான நிலையில், இந்த படத்தில் சூர்யா ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியாகி மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்ற மித்ர் - மை ஃப்ரெண்ட் என்ற திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதி சினிமாவில் அறிமுகமான சுதா கொங்கரா, இயக்குனர் மணிரத்னத்திடம் பல ஆண்டுகள் உதவி மற்றும் இணை இயக்குனராக பணியாற்றினார். குறிப்பிடத்தக்க வகையில் மணிரத்னம் இயக்கிய அரசியல் படமான ஆயுத எழுத்து படத்தில் பணியாற்றிய போது அவருக்கு சூர்யாவுடன் நட்பு ஏற்பட்டது.

மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து மற்றும் தான் இயக்கிய சூரரைப் போற்று ஆகிய இரண்டு படங்களிலும் சூர்யாவுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து இயக்குனர் சுதா கொங்கரா சமீபத்தில் பகிர்ந்துகொண்டார். இதில், சூர்யா, தொடர்ந்து தனது நடிப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார். அவர் அமைதியாக உட்கார்ந்திருப்பது போல் தெரியும். நான் அவருடைய செயல்முறையைப் பார்த்திருக்கிறேன்.

இதை சொல்ல வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் ஒரு சுவரின் அருகே நின்று தனது வசனங்களை பேசிப்பார்ப்பதை நான் பார்த்திருக்கிறேன். தன்னை மேம்படுத்திக்கொள்ள அவர் உறுதியாக இருப்பதால் அவர் மேலும் மேலும் உயர்ந்துகொண்டு இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன் என்று சுதா கொங்கரா கூறியுள்ளார்.

தொடர்ந்து, ஆயுத எழுத்து படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்த சுதா கொங்கரா, சூர்யாவின் முதல் ஷாட், கதவைத் தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறக்க வேண்டும். இந்த காட்சியில் அவர் 26 டேக்குகள் எடுத்தார்.இதை பார்த்த மணி சார், ‘எனக்கு பரவாயில்லை’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இந்த கதாபாத்திரத்திற்கு, இது சிறப்பாக இருக்கும். இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்' என்று கேட்டு 26 டேக்குகள் வரை சென்றது. அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ‘இது போதும்’ என்று அவர் உங்களிடம் சொல்ல மாட்டார். சொல்லப் போனால், ‘இல்லை சூர்யா, சரியாக செய்துவிட்டீகள், அதை விடுங்கள்!’ என்று நான் அவரிடம் சொல்ல வேண்டியிருந்தது. நான் அவரிடம் அந்த குணத்தை விரும்புகிறேன்.

இந்திய மலிவு விலை விமான நிறுவனமான சிம்ப்ளிப்ளை டெக்கான் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கை மற்றும் பயணத்தால் ஈர்க்கப்பட்டு, உருவான சூரரைப்போற்று திரைப்படம், கோவிட்-19 காரணமாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் பரவலான பாராட்டைப் பெற்றது மற்றும் 68வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகை உட்பட ஐந்து விருதுகளை வென்றது. இருப்பினும், இந்த படத்தின் இந்தி ரீமேக்கான சர்ஃபிரா கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ்ஆபீசில் வசூலை பெற தடுமாறி வருகிறது.

சூர்யாவைத் தவிர, சூரரைப் போற்று படத்தில், அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், மோகன் பாபு, ஊர்வசி மற்றும் பூ ராமு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராவல் சர்ஃபிராவில்  ராதிகா மதன், சீமா பிஸ்வாஸ் மற்றும் ஆர் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Surya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment