ஆஸ்கர் அகாடமி விருதுகளுக்கு வாக்களித்தபடத்தை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம், ஆஸ்கர் கமிட்டியில் இணைந்த முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஆஸ்கர் கமிட்டியில் இடம்பிடித்த முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளா நடிகர் சூர்யா. கடந்த ஜூன் மாதம், ஆஸ்கர் அகாடமியின் 2022-ம் ஆண்டுக்கான அகாடமி வகுப்பிற்கு அழைக்கப்பட்ட புதிய 397 கலைஞர்களின் பட்டியலை அகாடமி வெளியிட்டது. அதில் சூர்யாவின் பெயர் இடம்பெற்றிருந்ததைக் கண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இப்போது, நடிகர் சூர்யா வரவிருக்கும் ஆஸ்கார் விருதுகளுக்கு வாக்களித்துள்ளார். ஆஸ்கர் விருது அறிவிப்பு 13 மார்ச் 2023 அன்று நடைபெற உள்ளது.
ஆஸ்கர் விருதுக்கு வாக்களித்த படத்தை நடிகர் சூர்யா சமூக ஊடகங்கங்களில் பதிவிட்டுள்ளார். (நிச்சயமாக, விவரங்களை வெளிப்படுத்தவில்லை). வாக்களிப்பு முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இரண்டு முறை ஆஸ்கர் அகாடமி விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், அகாடமி விருதுகளுக்கு வாக்களித்ததை அறிவித்து இதேபோன்ற படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் நடிகர்களைப் பொறுத்தவரை, சூர்யாவைத் தவிர, 2022-ல் இந்தியாவிலிருந்து கஜோல் மட்டுமே ஆஸ்கர் கமிட்டியின் ஒரு பகுதியாக இருக்க அழைக்கப்பட்டுள்ளார். இந்திய இயக்குநரும் திரைக்கதை எழுத்தாளருமான ரீமா காக்டியை குழுவில் சேர அகாடமி அழைத்தது.
கடந்த ஆண்டு அகாடமியால் அழைக்கப்பட்ட 397 உறுப்பினர்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் வாக்களிப்புக் குழுவில் சேருவதற்கான ஒரே வழி ஸ்பான்சர்ஷிப் மூலமாகவே மட்டுமே சேர முடியும். விண்ணப்பித்து சேர முடியாது. ஏற்கனவே, இருக்கும் இரண்டு உறுப்பினர்கள் குழுவில் சேர்க்க யாரையாவது ஸ்பான்சர் செய்ய வேண்டும். அதற்கு மேல், ஆஸ்கர் விருது பெற்றவர்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்டவர்கள் தானாகவே உறுப்பினர்களாக கருதப்படுவார்கள்.
ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த அசலான பாடல் என்ற பிரிவின் கீழ் போட்டியிடுவதால், வரவிருக்கும் ஆஸ்கார் விருதுகளுக்கு இந்தியாவில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்றுள்ள இப்பாடல் ஆஸ்கார் விழாவில் ஒலிபரப்பப்பட உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“