scorecardresearch

அருண் விஜய் மகனை நடிகராக அறிமுகப்படுத்தும் சூரியா; வைரலான புகைப்படம்

நடிகர் சூரியாவால் எனது மகன் நடிகராக அறிமுகமாகிறார் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

suriya introduces actor arun vijay's son arnav vijay, அருண் விஜய், ஆர்னவ் விஜய், சூரியா, 2டி எண்டெர்டெயின்மெண்ட், arun vijay son arnav vijay introduced, நடிகராக அறிமுகமாகும் அருண் விஜய் மகன் ஆர்னவ் விஜய், 2d entertainment, suriya, vijaya kumar

நடிகர் சூரியா தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் மூலம் நடிகர் அருண் விஜய் மகனை நடிகராக அறிமுகப்படுத்துகிறார். அந்த படத்தின் பூஜையில், சூரியா, அருண் விஜய், அவரது மகன் ஆர்னவ் விஜய், விஜயகுமார் ஆகியோர் பங்கேற்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகர் சூரியா நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூரியா நடித்து தயாரித்த சூரரைப் போற்று படம் ஓடிடியில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

பொதுவாக சூரியா தயாரிக்கும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல படங்களாக இருக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

இந்நிலையில், நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் அருண் விஜய்யின் மகன் ஆர்னவ் விஜய் நடிகராக அறிமூகமாகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை இயக்குனர் சரோவ் ஷண்முகம் இயக்குகிறார். அந்த படத்தின் தொடக்கவிழா பூஜையுடன் இன்று துவங்கியது. பூஜையில் அருண் விஜயின் தந்தை விஜயகுமார், அருண் விஜய், அவருடைய மகன் ஆர்னவ் விஜய் ஆகியோருடன் நடிகர் சூரியா, உள்ளிட்டோர் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

சூர்யா தயாரிக்கும் இந்த படம் சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்தப் படத்தின் கதை சிறுவனுக்கும், நாய்க்கும் இடையேயான பாசத்தை குறிப்பிடுகிறது. இந்த திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஊட்டியில் நடக்கவிருக்கிறது.

இது குறித்து அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்கள் எல்லாருடைய ஆசீர்வாதங்களுடனும், எனது மகன் ஆர்னவ் விஜய் இன்று நடிகராக அறிமுகமாகிறார் என்று அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி! நடிகர் சூரியாவால் அவன் நடிகராக அறிமுகமாகிறார் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். தலைமுறைகளுக்குப் பிறகு தொடரும் இந்த நட்புறவை வேறு எங்கும் கேட்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Suriya introduces actor arun vijays son arnav vijay in new movie of 2d entertainment

Best of Express