என்.ஜி.கே தொகுதியில் எம்.எல். ஏ -வாகும் நடிகர் சூர்யா!!!

ஆயுத எழுத்து திரைப்படத்தில் நடிகர் சூர்யா மாணவர் தலைவராக  நடித்திருந்தார்.

ஆயுத எழுத்து திரைப்படத்தில் நடிகர் சூர்யா மாணவர் தலைவராக  நடித்திருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
என்.ஜி.கே தொகுதியில் எம்.எல். ஏ -வாகும் நடிகர் சூர்யா!!!

என்.ஜி.கே தொகுதி

நடிகர் சூர்யா என்.ஜி.கே படத்தில் சட்டமன்ற உறுப்பினராக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

என்.ஜி.கே தொகுதி:

நடிகர் சூர்யாவின் என்.ஜி.கே திரைப்படத்தில்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.  என்.ஜி.கே திரைப்படம் அரசியல் சார்ந்த திரைப்படம் என்ற தகவல் எற்கனவே வெளியான நிலையில்  தற்போது இந்த படத்தில் நடிகர் சூர்யா  எம்.எல். ஏ கதாபாத்திரத்தில் நடிப்பதாக மற்றொரு செய்தியும்  வெளியாகியுள்ளது.

அதன்படி நந்த கோபால குமரன் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நேரடி அரசியலில் ஈடுபட்டு எம்.எல்.ஏவாக மாறிய கதாபத்திரத்தில் நடிப்பதாக கோலிவுர் வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றன.   என்.ஜி.கே படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Advertisment
Advertisements

என்.ஜி.கே தொகுதி சமூகவலைத்தளங்களில் பரவும் புகைப்படம்

மற்றொரு பக்கம் நடிகர் விஜய் நடித்து வரும் சர்கார் திரைப்படத்தின் தகவல்களும்   இணையத்தில் வெளியாகிக்  கொண்டிருக்கின்றன. குறிப்பாக சர்காரில் நடிகர் விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் காட்சிகள்  எடுக்கப்பட்டதாகவும்  தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் அந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை  என்பது தெரியவில்லை.

என்.ஜி.கே தொகுதி

ஆயுத எழுத்து திரைப்படத்தில் நடிகர் சூர்யா மாணவர் தலைவராக  நடித்திருந்தார். அந்த படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டிருந்தது. இந்நிலையில்  தற்போது அவர் முதன் முறையாக எம் எல் ஏவாக நடிக்கும் அரசியல் படம் மக்களை கவருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Actor Suriya Mla

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: