Advertisment

ஒரே மேடையில் ரஜினிகாந்த்- ஷங்கர்- சூர்யா: காப்பான் ஆடியோ லாஞ்ச் எதிர்பார்ப்புகள்

kaappaan audio launch: நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் கலந்துக் கொள்வதையும், தயாரிப்பு நிறுவனமான லைகா தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
Jul 17, 2019 12:51 IST
Rajinikanth, Suriya, S. Shankar, Vairamuthu, kaappaan, kv anand, lyca twitter, kv anand twitter, காப்பான் ஆடியோ லாஞ்ச்

Rajinikanth, Suriya, S. Shankar, Vairamuthu, kaappaan, kv anand, lyca twitter, kv anand twitter, காப்பான் ஆடியோ லாஞ்ச்

Rajinikanth, Suriya, S. Shankar, Vairamuthu at one stage: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷங்கர், நடிகர் சூர்யா ஒரே மேடையில் தோன்றும் காப்பான் பட ஆடியோ லாஞ்ச் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விழா 21-ம் தேதி நடக்கிறது.

Advertisment

நடிகர் சூர்யா இறுதியாக ‘என்.ஜி.கே’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை இயக்குநர் செல்வராகவன் இயக்க, சாய் பல்லவி ரகுல் ப்ரீத் சிங்  என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருந்தனர். அதைத் தொடர்ந்து தற்போது ’காப்பான்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதனை இயக்குநர் கே.வி ஆனந்த் இயக்கி வருகிறார்.

kaappaan audio launch: காப்பான் ஆடியோ லாஞ்ச்

’அயன்’, ‘மாற்றான்’ ஆகியப் படங்களை தொடர்ந்து சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது. இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இதில் மோகன்லால் சாயிஷா, ஆர்யா, சமுத்திரக்கனி மற்றும் பொம்மன் இரானி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ’காப்பான்’ படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தப் படத்தின் ஆடியோ வரும், 21-ம் தேதி வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்தவாரம் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘சிரிக்கி’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து முழு பாடல்களையும் கேட்க ஆர்வமாக உள்ளனர் ரசிகர்கள். காப்பான் படம் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாவதும், இதன் சேட்டிலைட் உரிமையை சன் டி.வி நிறுவனம் வாங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தவிர, காப்பான் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் கலந்துக் கொள்வதையும், தயாரிப்பு நிறுவனமான லைகா தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

#Actor Suriya #Kv Anand #Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment