சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படத்தில் இருந்து தேவையில்லாத 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு இருப்பதாக திரையரங்க தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில், சூர்யாவுடன் திசா படானி, பாபி தியோல், கார்த்தி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, நடராஜன், கோவை அரலா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில், ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரிய அளவு பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் பரப்பப்பட்டு வருகிறது.
கங்குவா படம் ஒரே சத்தமாக இருப்பதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. நடிகை ஜோதிகா சமூக வலைதளங்களில் திட்டமிட்டு எதிர்மறையான விமர்சனங்கள் வைக்கப்படுகிறது என்று கூறினார். மேலும், சத்தமாக இருப்பதாகக் கூறப்பட்ட, இடங்களில் ஆடியோ சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில், கங்குவா திரைப்படத்தில் இருந்து தேவையில்லாத 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு இருப்பதாக திரையரங்க தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. கங்குவா படக்குழு படத்தில் தேவையில்லாத காட்சிகளை நீக்க முடிவு செய்து, அதன்படி 12 நிமிட காட்சிகளை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“