சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் டிஜிட்டல் உரிமம் தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்ணாத்த படத்திற்கு பிறகு இயக்குனர் சிறுத்தை சிவா தற்போது சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்கி வருகிறார். வரலாற்று புனைவு திரைப்படமாக இந்த படம் சூர்யாவின் சினிமா கெரியரில் அதிக பட்ஜெட்டில் எடுக்ககப்படும் பிரம்மாண்ட படமாக இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது, கங்குவா படத்தின் டிஜிட்டல் உரிமை வரலாறு காணாத விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா கூறுகையில், படத்தின் தென்னிந்திய டிஜிட்டல் உரிமை மட்டும் அமேசான் பிரைம் வீடியோவுக்கு ரூ.80 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் மார்க்கெட் குறித்து ஞானவேல்ராஜா கூறுகையில், எல்லா செய்திகளும் ஒவ்வொன்றாக வெளிவரும். தற்போது, டிஜிட்டல் உரிமைகளுக்கான அமேசானுடன் ஒப்பந்தத்தை முடித்துவிட்டோம். படத்தின் முழு டிஜிட்டல் உரிமை மட்டுமல்ல… படத்தின் தென்னிந்திய மொழி உரிமையும் மட்டும் 80 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமா துறைக்கு இது ஒரு அளவுகோலாகும். வேறு எந்த படமும் இவ்வளவு பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதில்லை. எனவே, படத்தின் மற்ற வியாபாரத்தைக் கணக்கிடுவதை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்” என்று கூறியுள்ளார்.
படத்தின் டீசர் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்த அவர், “சூரியாவின் தோற்றத்தை நாங்கள் இன்னும் வெளியிடாததால் ரசிகர்கள் விரக்தியடைவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் இறுதியாக அதை வெளிப்படுத்தும் போது, அது வெற்றி பெறும். தற்போது, பல்வேறு திரைப்படத் துறைகளைச் சேர்ந்த ஐந்து பெரிய நட்சத்திரங்கள் இந்தப் படத்திற்கு டப்பிங் பேசிக்கொண்டிருக்கிறார்கள், அதனால்தான் அது தாமதமாகிறது.
கோஸ்ட் ஆஃப் சுஷிமா என்ற ஆக்ஷன்-சாகச விளையாட்டின் கிழித்தெறிவது போல் படம் தெரிகிறது என்ற விமர்சனத்தை பற்றி பேசிய அவர், 16ம் நூற்றாண்டில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து முழுக்க முழுக்க சிவா சாரின் கற்பனையில் படம் உருவாகியுள்ளது. இந்த படம் மற்ற எந்த படங்களின் இன்ஸ்பிரேஷனும் இல்லை, ”என்று அவர் கூறினார்.
கங்குவா படம் பத்து மொழிகளில் வெளியாகும் என்பதால் தான் படத்திற்கு செலவழித்த பட்ஜெட்டை வசூலிக்க முடியும் என்கிறார் ஞானவேல்ராஜா. இந்த படத்தின் மூலம் திஷா பதானி தமிழில் அறிமுகமாக உள்ள நிலையில், கங்குவா படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“