scorecardresearch

Kaappaan Movie Review: காப்பான் சூர்யாவுக்கு ’கேம் சேஞ்சிங்’ படம்!

Kaappaan Movie Review, Release Live Updates: சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக திரைகளில் அதாவது 600 ஸ்கிரீன்களில் இன்று ‘காப்பான்’ வெளியாகியுள்ளது. 

Kaappaan Movie Review: காப்பான் சூர்யாவுக்கு ’கேம் சேஞ்சிங்’ படம்!

Kaappaan Movie Review Updates: இயக்குநர் கே.வி ஆனந்த் இயக்கத்தில் ’அயன், மாற்றான்’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, தற்போது ‘காப்பான்’ படத்தில் நடித்திருக்கிறார். இதில் பொம்மன் இரானி, சாயிஷா, ஆர்யா, மோகன் லால், பூர்ணா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Kaappaan Movie Review: Mohanlal Starrer Kaappaan Movie Release Updates

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பிரதமராக நடிக்கும் மோகன் லால், அவருக்குக் கீழே பணியாற்றும் சிறப்பு அதிகாரி சூர்யா என இந்த அட்டகாச காம்போவை திரையில் காண காத்துக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள். இந்நிலையில் சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக திரைகளில் அதாவது 600 ஸ்கிரீன்களில் இன்று ‘காப்பான்’ வெளியாகியுள்ளது.

Live Blog

Suriya’s Kaappan Tamil Movie Review Live Updates – நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்பட லைவ் அப்டேட்ஸ்!














12:24 (IST)20 Sep 2019





















சூர்யா – கே.வி.ஆனந்த் காம்போ

இயக்குநர் கே.வி.ஆனந்த் மற்றும் சூர்யா காம்போ, எதிர்பார்த்தததை விட பெரிதாக இருக்கிறது 

12:11 (IST)20 Sep 2019





















நன்றி சொன்ன ஆர்யா</div>

காப்பான் படத்தில் தான் அங்கம் வகிக்க காரணமாக இருந்த இயக்குநர் கே.வி.ஆனந்த், நடிகர் சூர்யா மற்றும் லைகா புரொடக்‌ஷனுக்கு தனது நன்றியை தெரிவித்திருக்கிறார் நடிகர் ஆர்யா. 

11:52 (IST)20 Sep 2019





















ஜஸ்டின் பிரபாகரன் ட்வீட்

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் காப்பான் குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

11:26 (IST)20 Sep 2019





















சாயிஷா ட்வீட்

படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்து உங்கள் அன்பையும், ஆதரவையும் எங்களுக்குக் காட்டுங்கள். இப்படியான ஓர் வாய்ப்பை வழங்கியதற்கு கே.வி.ஆனந்த் சாருக்கு என் நன்றி” என காப்பான் படத்தின் நாயகி சாயிஷா ட்வீட் செய்திருக்கிறார். 

11:07 (IST)20 Sep 2019





















பலவீனம்

பலவீனமான வில்லன் பாத்திரம். சண்டைக் காட்சிகள் நன்றாக இருந்தன. மோசமான பாடல்கள், காட்சிகள் மற்றும் எழுத்து. பல சமூக சிக்கல்களைத் தொட்டு குழப்பமடையச் செய்திருக்கிறார் கே.வி ஆனந்த்

10:55 (IST)20 Sep 2019





















ப்யூர் ப்ளாக்பஸ்டர் மெட்டீரியல்

படம் மிக விறுவிறுப்பாக உள்ளது. எங்கும் இழுப்பதாக தெரியவில்லை. அனைத்து செண்டர் ஆடியன்ஸையும் கவரும். 

10:40 (IST)20 Sep 2019





















கேம் சேஞ்சிங் படம்

சூர்யாவுக்கு கேம் சேஞ்சிங் படம் என நவீன் என்ற சூர்யாவின் ரசிகர் தெரிவித்துள்ளார். 

10:22 (IST)20 Sep 2019





















ப்ளாக்பஸ்டர் நிச்சயம்

”நிச்சயமாக ப்ளாக் பஸ்டர் ஹிட்டடிக்கும். விவசாயத்தைப் பற்றி சூர்யா பேசும் அந்த சீன் வேற லெவலாக உள்ளது” என அருண் அஜித் தெரிவித்துள்ளார். 

10:18 (IST)20 Sep 2019





















விஜய் ரசிகர்களின் வாழ்த்து

”நிறைய பாஸிட்டிவான விமர்சனங்கள் வருகின்றன. சிங்கம் சிரீஸுக்குப் பிறகு சிறந்த படம். சூர்யாவுக்கு சிறப்பான கம் பேக். தளபதி ரசிகர்களின் வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருக்கிறார். 

Kaappan Review: குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் காப்பான் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கடந்த 2016-ம் ஆண்டு ‘சரவெடி’ என்ற தலைப்பில் எழுதிய தன்னுடைய கதையை இயக்குனர் கே.வி.ஆனந்திடம் தெரிவித்தாகவும், எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது வாய்ப்பு தருவதாக ஏமாற்றி தற்போது ’காப்பான்’ படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் புகார் கூறினார்.

இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘காப்பான்’ திரைப்படத்தை வெளியிட தடையில்லை என கூறி ஜான் சார்லஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Suriya kv anand sayyeshaa kaappan review live