Kaappaan Movie Review Updates: இயக்குநர் கே.வி ஆனந்த் இயக்கத்தில் ’அயன், மாற்றான்’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, தற்போது ‘காப்பான்’ படத்தில் நடித்திருக்கிறார். இதில் பொம்மன் இரானி, சாயிஷா, ஆர்யா, மோகன் லால், பூர்ணா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Kaappaan Movie Review: Mohanlal Starrer Kaappaan Movie Release Updates
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பிரதமராக நடிக்கும் மோகன் லால், அவருக்குக் கீழே பணியாற்றும் சிறப்பு அதிகாரி சூர்யா என இந்த அட்டகாச காம்போவை திரையில் காண காத்துக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள். இந்நிலையில் சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக திரைகளில் அதாவது 600 ஸ்கிரீன்களில் இன்று ‘காப்பான்’ வெளியாகியுள்ளது.
Live Blog
Suriya’s Kaappan Tamil Movie Review Live Updates – நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்பட லைவ் அப்டேட்ஸ்!
இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘காப்பான்’ திரைப்படத்தை வெளியிட தடையில்லை என கூறி ஜான் சார்லஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.
Web Title: Suriya kv anand sayyeshaa kaappan review live
இயக்குநர் கே.வி.ஆனந்த் மற்றும் சூர்யா காம்போ, எதிர்பார்த்தததை விட பெரிதாக இருக்கிறது
காப்பான் படத்தில் தான் அங்கம் வகிக்க காரணமாக இருந்த இயக்குநர் கே.வி.ஆனந்த், நடிகர் சூர்யா மற்றும் லைகா புரொடக்ஷனுக்கு தனது நன்றியை தெரிவித்திருக்கிறார் நடிகர் ஆர்யா.
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் காப்பான் குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்து உங்கள் அன்பையும், ஆதரவையும் எங்களுக்குக் காட்டுங்கள். இப்படியான ஓர் வாய்ப்பை வழங்கியதற்கு கே.வி.ஆனந்த் சாருக்கு என் நன்றி” என காப்பான் படத்தின் நாயகி சாயிஷா ட்வீட் செய்திருக்கிறார்.
பலவீனமான வில்லன் பாத்திரம். சண்டைக் காட்சிகள் நன்றாக இருந்தன. மோசமான பாடல்கள், காட்சிகள் மற்றும் எழுத்து. பல சமூக சிக்கல்களைத் தொட்டு குழப்பமடையச் செய்திருக்கிறார் கே.வி ஆனந்த்
படம் மிக விறுவிறுப்பாக உள்ளது. எங்கும் இழுப்பதாக தெரியவில்லை. அனைத்து செண்டர் ஆடியன்ஸையும் கவரும்.
சூர்யாவுக்கு கேம் சேஞ்சிங் படம் என நவீன் என்ற சூர்யாவின் ரசிகர் தெரிவித்துள்ளார்.
”நிச்சயமாக ப்ளாக் பஸ்டர் ஹிட்டடிக்கும். விவசாயத்தைப் பற்றி சூர்யா பேசும் அந்த சீன் வேற லெவலாக உள்ளது” என அருண் அஜித் தெரிவித்துள்ளார்.
”நிறைய பாஸிட்டிவான விமர்சனங்கள் வருகின்றன. சிங்கம் சிரீஸுக்குப் பிறகு சிறந்த படம். சூர்யாவுக்கு சிறப்பான கம் பேக். தளபதி ரசிகர்களின் வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருக்கிறார்.