Advertisment
Presenting Partner
Desktop GIF

'தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினை வேண்டாம்' - சூர்யா வேண்டுகோள்

“எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம்."

author-image
WebDesk
New Update
Suriya sivakumar, suriya statement, meera mithun

விமர்சனங்கள் குறித்து சூர்யா கருத்து

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். அங்கு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அவர், சர்ச்சை நாயகி எனும் பட்டம் கொடுக்கும் அளவுக்கு முன்னேறினார். சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் நெபோட்டிஸ தயாரிப்புகள், என தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்தார். இந்த விவகாரம் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, மற்றும் சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா ஆகியோரையும் அவர் விட்டு வைக்கவில்லை.

Advertisment

கோலிவுட்டை கலக்கும் இயக்குநர்-நடிகை ஜோடிகள்!

இதனால் கடும் கோபமடைந்த விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள், மீரா மிதுனை சமூக வலைதளங்களில் விமர்சித்து செய்து வருகின்றனர். இதற்கிடையே விஜய், சூர்யா மீது இப்படி அவதூறு பரப்பும் மீரா மிதுனை கண்டித்து, இயக்குநர் இமயம் பாரதிராஜா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “சிறிய பெண்ணான மீரா மிதுன் பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், ”தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள்” என கடந்த 2018-ம் ஆண்டு தான் பதிவிட்டிருந்த ட்வீட்டை ஷேர் செய்திருக்கும் நடிகர் சூர்யா, “எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்..” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Actor Suriya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment