தமிழ் சினிமா உலகில் பாப்புலர் தம்பதிகளாக வலம் வரும் சூர்யா - ஜோதிகா ஜோடியின் மகன் தேவ் கராத்தே-வில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். நடிகர் சூர்யா கராத்தே-வில் பிளாக் பெல்ட் வங்கிய மகனையும் சக மாணவர்களையும் நேரில் சென்று உற்சாகப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் வெற்றிகரமான பாப்புலரான தம்பதியராக சூர்யா - ஜோதிகா திகழ்கின்றனர். உயிரிலே கலந்தது, பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, மாயாவி, சில்லுனு ஒரு காதல், பேரழகன் உள்ளிட்ட பல படங்களில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்தனர். சினிமாவில் நடிக்கும்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து, சூர்யா - ஜோதிகா இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, தேவ் மற்றும் தியா என இரு குழந்தைகள் உள்ளனர்.
சூர்யா கங்குவா படத்தில் நடித்து வருகிறார். ஜோதிகா பாலிவுட் படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
அண்மையில், சூர்யா மற்றும் ஜோதிகா கணவன் மனைவி இருவரும் சேர்ந்து உடற்பயிற்சி செய்த வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இருவரும் ஜோடியாக சினிமாவில் நடிப்பதற்காகவே, இருவரும் ஜிம்மில் வொர்க் அவுட் செய்து ஃபிட்டாகி வருவதாகக் கூறப்படுகிறது. அதே போல, சூர்யாவின் குழந்தைகளான தேவ் மற்றும் தியா இருவரும் விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யாவின் மகன் தேவ் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு தனது மகனையும் தனது மகனுடன் படிக்கும் தேவ்-வின் நண்பர்களையும் பிளாக் பெல்ட் வாங்கிய சக போட்டியாளர்களையும் ஊக்குவித்து பாராட்டியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“