‘வானம் என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா’ சூரரைப் போற்று மாஸ் ட்ரெய்லர்

நடிகர் சூரியாவின் நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. ‘வானம் என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா’ மாஸ் என்று ரசிகர்கள், நெட்டிசன்கள் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

suriya, soorarai pottru, soorarai pottru, suriya's soorarai pottru trailer, soorarai pottru trailer released, சூரியா, சூரரைப் போற்று, சூரரைப் போற்று ட்ரெய்லர் வெளியீடு, ரசிகர்கள் வரவேற்பு, சூரியாவின் சூரரைப் போற்று, fans netizens reactions to soorarai pottru trailer, 2d entetainment, amazon prime ott, சூரரைப் போற்று நவம்பர் 12-ம் தேதி வெளியீடு, suriya, soorarai pottru movie will be released on november 12, diwali deepawali, soorarai pottru

நடிகர் சூரியாவின் நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. ‘வானம் என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா’ மாஸ் என்று ரசிகர்கள், நெட்டிசன்கள் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

ஏர் டெக்கன் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சூரரைப் போற்று திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூரியா கோபிநாத் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சூரரைப் போற்று திரைப்படத்தை நடிகர் சூரியா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்தார். சூரரைப் போற்று திரைப்படம் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாகப் பொது முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே தயாரிப்பு பணிகள் எல்லாம் நிறைவடைந்துவிட்டது. ஆனால், பொது முடக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்டதால் சூரரை போற்று திரைப்படம் திரையரங்குகளில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், சூரியா சூரரைப் போற்று படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்தார்.

இதையடுத்து, சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திரைப்படத்தை வெளியிடுவதற்கான சில சான்றுகள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், படத்தை திட்டமிட்ட படி வெளியிட முடியவில்லை.

இது குறித்து சூர்யா விரிவான கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, இந்திய விமானப் படையில் இருந்து தடையில்லா சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து, சூரரைப் போறு படத்தின் ட்ரெய்லர் இன்று காலை 10 மணிக்கு வெளியானது.

சூரியாவின் சூரரை போற்று திரைப்படத்தின் ட்ரெய்லர், “ஏறு ஓட்டுறவனும் ஏரோபிளேனுல போவான்” என்று சூரியாவின் குரலுடன் தொடங்குகிறது. சாதிக்கத் துடிக்கும் இளைஞராக சூரியா தனது லட்சியத்தை அடைய கடுமையாக போராடுவதை ட்ரெய்லரில் கொண்டுவந்துள்ளனர்.

சூரரைப் போற்று ட்ரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் சூரியா, படம் நவம்பர் 12ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி-யில் வெளியாகும் என்பதை அறிவித்துள்ளார்.

சூரியாவின் சூரரைப் போற்று ட்ரெய்லரில், மாஸாக அமைந்திருப்பது கடைசியாக இடம் பெற்ற வசனம்தான். ‘வானம் என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா, …. ஃபிளைட்ட எறக்குடா நா பாத்துக்குறேன்’ என்ற வசனம் சூரியா ரசிகர்களையும் நெட்டிசன்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

சூரரைப் போற்று படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் நெட்டிசன்கள் ‘வானம் என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா, …. ஃபிளைட்ட எறக்குடா நா பாத்துக்குறேன்’ மாஸாக இருக்கிறது என்று கம்மெண்ட் செய்துள்ளனர்.

ரசிகர் ஒருவர் ட்விட்டரில், “வெறித்தனம் அண்ணா, நிச்சயமாக நாங்கள் திரையரங்குகளில் ரொம்ப மிஸ் பண்ணுவோம். ட்ரெய்லருக்கான பிஜிஎம்-ஐ விவரிக்க வார்த்தைகள் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு ட்விட்டர் பயனர், இந்த ட்ரெய்லர் சவுண்டுதான் அதிகமாக உள்ளது என்று நடிகர் வினுசக்ரவர்த்தியின் படத்தை மீம் ஆக போட்டு கம்மெண்ட் செய்துள்ளார்.

மற்றொரு ட்விட்டர் பயனர், “ரொம்ப நாளுக்குப் பிறகு, சூரியாவோட நல்ல ட்ரெய்லர், நல்ல படம் பாக்கப்போற உணர்வு, சூப்பர் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

ஒரு விஜய் ரசிகர், “நான் விஜய் ரசிகன், ஆனாலும், உங்கள் படத்துகாக காத்திருக்கிறேன். வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

வேறொரு ட்விட்டர் பயனர், “டிரைலர் இன்னும் கொஞ்சம் மாஸா எடுத்து இருக்கலாம் அண்ணா படம் கண்டிப்பாக நல்லா இருக்கும்னு உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துகள் அண்ணா” என்று ட்வீட் செய்துள்ளார்.

ரஜினியின் காலாவையும் சூரியாவின் சூரரைப் போற்று படங்களையும் ஒப்பிட்டுள்ள ஒரு ட்விட்டர் பயனர், “இந்த பூமி ஒன்னும் அவன் அப்பன் வீட்டு சொத்தில்ல” – காலா
“வானம் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா” – மாறா” என்று ட்வீட் செய்துள்ளார்.

சூரரைப் போற்று மாஸ் ட்ரெய்லர் ரசிகர்களிடமும் நெட்டிசன்களிடமும் வரவேற்பையும் கலவையான கருத்துகளையும் பெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suriya soorarai pottru trailer released fans netizens reactions

Next Story
‘கிரீடம்’, ‘கொம்பு’, குழம்பிய போட்டியாளர்கள்.. என்னதான் ஆச்சு பிக் பாஸ்!Bigg Boss 4 Tamil Vijay tv Aajeeth Sanam Suresh Kamal Ramya Bala Review Day 21 
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com