scorecardresearch

சூர்யாவின் அடுத்த படத்திற்கு சிக்கல்: ‘செக்’ வைக்கும் தியேட்டர் அதிபர்கள்

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Suriya Soorarai Pottru, actor surya
சூரரைப் போற்று

கொரோனா தொற்று தமிழகத்தில் ஆரம்பித்ததுமே திரையரங்குகள் மூடப்பட்டன. அதோடு சினிமா படபிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. இதனால் இந்தாண்டு வெளியாகவிருந்த பல படங்களின் வெளியீடு தடைப்பட்டிருக்கிறது. இதற்கிடையே ஜோதிகாவின் ‘பொன் மகள் வந்தாள்’, கீர்த்திப் சுரேஷின் ‘பென்குயின்’ ஆகியப் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின.

சென்னையில் இடை விடாத மழை: தண்ணீரில் மிதந்த வாகனங்கள்

முன்னதாக ’பொன் மகள் வந்தாள்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் படத்தின் தயாரிப்பாளரான சூர்யா தனது முடிவிலிருந்து பின் வாங்காமல், ’பொன் மகள் வந்தாள்’ படத்தை ஆன்லைனில் ரிலீஸ் செய்தார்.

தற்போது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், இந்தப் படமும் ஓடிடி தளத்தில் வெளியாகும் என முன்பு சொல்லப்பட்டது. ஆனால் இதனை படக்குழுவினர் மறுத்தனர். இந்நிலையில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கரு நீள முடிக்கு வால்நட் எண்ணெய்.. வீட்டில் செய்யலாம் வாங்க!

சூர்யா மற்றும் அவரின் குடும்பத்தார் நடித்த படங்களை தியேட்டர்களில் வெளியிடுவது இல்லை என்று முடிவு செய்திருப்பதாக தியேட்டர் உரிமையளர்கள் சங்கத்தின் செயலாளரான பன்னீர் செல்வம்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தியேட்டர் உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களிடம் கலந்து பேசி சூரரைப் போற்று ரிலீஸ் பற்றிய இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பிரபல வினியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார். தியேட்டர் உரிமையாளர்கள் ’பொன் மகள் வந்தாள்’ படம் தொடர்பாக சூர்யா எடுத்த முடிவால் கோபமாக இருக்கிறார்கள். இருப்பினும் கலந்து பேசி நல்ல முடிவு எடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Suriya soorarai pottru trouble in release