சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா. இத்திரைப்படம் வரும் 14ம் தேதி திரையர்ங்குகளில் வெளியாகிறது. படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. பாலிவுட் நட்சத்திரங்களும் படத்தில் நடித்துள்ளனர். சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில், கங்குவா படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் சூர்யா, உதயநிதி ஸ்டாலின் என்னுடைய காலேஜ் ஜூனியராக இருந்தாலும் 'பாஸ்' என்று தான் கூப்பிடுவேன். அவர் என்னை வைத்து இரண்டு படங்கள் எடுத்திருக்கிறார். இப்போது துணை முதலமைச்சராக ஆகியிருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.
தொடர்ந்து, அரசியல் கட்சித் தொடங்கி உள்ள விஜய்க்கு சூர்யா மறைமுகமாக வாழ்த்து தெரிவித்தார். அவர் பேசுகையில், என் நீண்ட கால நண்பர், நாளை புதிய பாதையில் ஒரு புதிய பயணத்தை தொடங்குகிறார், அவருக்கு என் வாழ்த்துகள். அவருடைய வரவும் நல்வரவாக இருக்கட்டும் என்று விஜய்யின் பெயரை கூறாமல் வாழ்த்து தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“