தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக பிற மொழி படங்களின் கதையைத் திருடி அல்லது தழுவி சினிமா எடுப்பது என்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், அவர்கள் மூல மொழிப் படத்திற்கு எந்த காப்பீட்டையும் கொடுக்காமல் அறிவுத் திருட்டில் ஈடுபடுவது என்பதும் நடந்து வருகிறது. அப்படியான சில திரைப்படங்களின் கதைகளை ரசிகர்கள் உடனடியாக ஒவ்வொரு காட்சியாக இது இந்த படத்தில் இருந்து எடுக்கப்பட்டது, இது இந்தப் படத்தின் காப்பி என்று சமூக ஊடகங்களில் உடனடியாக பதிவிட்டு அம்பலப்படுத்தி விடுகிறார்கள். ஆனால், அதைப் பற்றி அந்த காப்பி திரைப்பட இயக்குனரோ, தயாரிப்பாளரோ, நடிகர்களோ பொருட்படுத்தாமல் கடந்து செல்கிறார்கள்.
இந்த சூழலில்தான், நடிகர் சூர்யா தனக்கு தெரியாமல் தனது 2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு மராத்தி படத்தின் கதையைத் திருடி எடுக்கப்பட்ட படம் தயாரிக்கப்பட்டிருப்பதை அறிந்து இயக்குனரை கடிந்துகொண்டதோடு, அந்த மராத்தி படத்தின் தயாரிப்பாளருக்கு தேடிச் சென்று ஒரு பெருந்தொகையை காப்பி ரைட்டாக கொடுத்திருக்கிறார். இதன் மூலம் நடிகர் சூர்யா தான் ஒரு ஜெண்டில் மேன் தயாரிப்பாளர் என்பதை நிரூபித்திருக்கிறார்.
சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தில் அப்படி எந்த இயக்குனர் எந்த படத்தின் கதையை திருடி எந்த படத்தை இயக்கினார் என்றால், சமீபத்தில் வெளியான ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும் படம்தான் அது.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் கடைக்குட்டி சிங்கம், பசங்க 2, உள்ளிட்ட படஙக்ளை தயாரித்துள்ளது. சமீபத்தில் 2டி என்டர்டெயின்மெண்ட் அமேசான் பிரைம் வீடியோவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் 4 படங்கள் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகும் என அறிவித்தனர்.
ஒப்பந்தப்படி, 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்த இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் அரிசில் மூர்த்தி படத்தை எழுதி இயக்கியிருந்தார். இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தின் கதை சிறப்பாக இருந்தாலும் படமாக்கிய விதத்தில் இருந்து குறைபாடுகள் படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இருப்பினும், இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தைப் பார்த்த சினிமா ரசிகர்கள் இந்த படத்தின் கதை மராத்தி படமான ரங்கா படாங்கா படத்தின் கதையைத் திருடி எடுக்கப்பட்டிருப்பதை சமூக ஊடகங்களில் பதிவிட்டு விமர்சித்தனர்.

2016ல் வெளியான ரங்கா படாங்கா மராத்தி திரைப்படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது விமர்சகர்களும் நெட்டிசன்களும் அம்பலப்படுத்தினர். தனது 2டி எண்டெய்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் திரைப்படம் மராத்திய படத்திலிருந்து திருடப்பட்டது என்பது சூர்யாவுக்கு தெரியவந்ததையடுத்து, கடுமையாக கோபம் அடைந்துள்ளார்.
சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தை நேர்மையாக இலக்குடன் நடத்துவதில் கவனமாக இருக்கிறார். அதனால், தங்கள் படத்தில் பணிபுரிகிறவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அனைத்தையும் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது என்று கூறுகிறார்கள்.
தமிழ் சினிமா உலகில் தற்போது இருக்கும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒரு இலக்குடன் செயல்படும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த படத்தின் கதை திருட்டுக் கதை என்றதும் சூர்யா கடும் கோபமடைந்துள்ளார். உடனடியாக, சூர்யா, இயக்குனர் அரிசில் மூர்த்தியை அழைத்து எச்சரித்துள்ளார். சூர்யா அதோடு நிறுத்திக்கொள்ளவில்லை, மராத்தி படமான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தின் தயாரிப்பாளருக்கு காப்பி ரைட்டாக பெரும் தொகையும் அளித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் அவருடைய நிறுவனம் தயாரித்த படத்தின் கதை வேறொரு படத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று அறிந்ததும், தானாக முன்வந்து காப்பி ரைட் கொடுத்திருப்பது இதுதான் முதல் நிகழ்வு என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனக்கு தெரியாமல் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு மராத்தி படத்தின் கதையைத் திருடி எடுக்கப்பட்டதை அறிந்து அந்த மராத்தி படத்தின் தயாரிப்பாளருக்கு தானாக முன்வந்து ஒரு பெருந்தொகையை காப்பி ரைட்டாக கொடுத்திருக்கிறார். இதன் மூலம் நடிகர் சூர்யா தான் ஒரு ஜெண்டில் மேன் தயாரிப்பாளர் என்பதை நிரூபித்திருக்கிறார் என்று அவருடைய ரசிகர்களும் கோலிவு வட்டாரங்களும் பாராட்டி வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“