சூர்யா நடித்து வரும் கங்குவா படம் குறித்து நாளுக்கு நாள் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் ஒரு போர் காட்சிக்காக 10000 பேர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், கடந்த ஒரு வருமாக சூர்யா நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இதனால் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2024-ம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் கங்குவா, தமிழ் சினிமாவில் அடுத்த டிரெண்செட்டராக மாறும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு தென்னிந்திய சினிமாவில், பாகுபலி, ஆர்ஆர்ஆர் கே.ஜி.எஃப் படங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்த நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் தமிழ் சினிமாவிற்கு உத்துசக்தியாக இருந்தது. தற்போது இந்த பட்டியலில் கங்குவா படம் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், மேல் குறிப்பிட்ட படங்களை விட கங்குவா அதிகபட்ஜெட்டில் தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில், படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது, இப்படத்தில் ஒரு போர் காட்சிக்கு 10000 பேர் பயன்படுத்தப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது, இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா டுடேயின் ஒரு அறிக்கையின்படி, பாபி தியோலுடன் நடிகர் சூர்யா மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட வீரர்களுடன் ஒரு பிரமாண்டமான போர் காட்சியை இயக்குனர் சிவா படமாக்கியுள்ளார். கங்குவாவில் போர்க் காட்சிகள் ஒரு சிறப்பம்சமாக இருக்கும், பிரமிக்க வைக்கும் காட்சி விளைவுகளைக் காட்டுகிறது. வரலாற்றுக்கு முந்தைய சகாப்தம் உட்பட இரண்டு காலகட்டங்களை உள்ளடக்கிய கதையுடன், இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சிவா மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் சர்வதேச படங்களுக்கு இணையான தரமான காட்சிகளை உருவாக்க வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களை இணைத்துள்ளனர். படத்தின் தொடக்கத்திலிருந்தே, கங்குவாவைப் பற்றி ஞானவேல் மிகவும் உற்சாகமாக பேசி வருகிறார்., இந்த படம் 24 மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் தெரிவித்து வருகிறார். கங்குவா, பாலிவுட் நடிகர் பாபி தியோல் மற்றும் டிஷால் பதானியின் தமிழ் அறிமுகமாகும் படமாகும்.
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை கூட தொடாத நிலையில், கங்குவா திரைப்படத்தை 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“