Surya 37 Title : சூர்யா 37 படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு படக்குழு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்திலும் கே.வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா 37 என்ற பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார்.
Surya 37 Title : சூர்யா 37 படத்தின் பெயர்
சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் கே.வி ஆனந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காப்பான், மீட்பான், உயிர்கா என மூன்று டைட்டில்களை வைத்து ரசிகர்களிடம் இப்படத்திற்காக ஓட்டெடுப்பு நடத்தினார். இதனை பார்த்த பல ரசிகர்களும் உயிர்கா என்ற பெயரே அதிகமாக கவர்கிறது என்றும், வித்தியாசமாக இருக்கிறது எனவும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சூர்யா 37 படத்தில் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஜனவரி 1 காலை 12.10 மணிக்கு வெளியாகும் என கே.வி. ஆனந்த், நடிகர் சூர்யா உட்பட படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
December 2018
படத்தின் டைட்டில் உயிர்கா என்பது உறுதியான தகவலாகவும் இருக்கலாம் என்று சில கோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றனர். இருப்பினும் படத்தின் குழு சார்பில் நாளை போஸ்டருடன் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.