என்னப்பா இப்படி ஒரு லவ்வா? 90ஸ் கிட்ஸ்களை கட்டிப்போட்ட சூர்யா – ஜோ மூவிஸ்!

டைரக்டர்கள் வரிசை கட்டி நின்ற காலம் அது

By: Updated: June 9, 2020, 03:56:10 PM

surya jyothika movies:சூர்யா’ என்ற மூன்றெழுத்தும் `ஜோதிகா’ என்ற மூன்றெழுத்தும் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களை கட்டி போட்டு வைத்திருக்கின்றனர் என்றால் அதை யாரும் மறுக்க மாட்டார்கள். எந்தவொரு திரையுலக முன்னனுபவமும் இல்லாமல், கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்து, ஒரு சிறந்த நடிகருக்கு தேவையான அனைத்து திறமைகளையும் குறுகிய காலக்கட்டங்களிலேயே வளர்த்து கொண்டு, இன்று நடிகர், தயாரிப்பாளர், சிறந்த கணவர், பேர் சொல்லும் மகன் என ஜொலித்து கொண்டிருக்கிறார் சூர்யா.

சூர்யாவின் இந்த வெற்றிக்கு அவரின் கடின உழைப்பு, விடாமுயற்சி காரணம் என்றாலும், ஜோதிகா இல்லாமல் இது சாத்தியமா? என்றால் அதை சூர்யாவே மறுக்க மாட்டார். காரணம், சூர்யா- ஜோதிகா இந்த ஜோடிகளுக்காகவே படம் பார்க்க சென்ற ரசிகர்கள் ஏராளம். தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் படத்தை ரிலீஸ் செய்ய டைரக்டர்கள் வரிசை கட்டி நின்ற காலம் அது. தயாரிப்பாளர்களும் சூர்யா- ஜோதிகாவை புக் செய்ய அதிகம் மெனக்கெடுத்தனர்.

ஆன் ஸ்கீரினில் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி பற்றி கேட்கவே வேண்டாம். இதலெல்லாம் வசனகர்த்தா எழுதிக் கொடுத்த டயலாக் தானா? இல்லை இருவரும் தங்கள் மனதில் இருப்பதை அப்படியே பேசுகிறார்களா? என்றெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்கள் யோசிப்பார்களாம். மும்பையில் இருந்து தனது அம்மாவின் துணையுடன் சென்னை வந்த ஜோ, இப்படி தமிழ்நாடு மருமகள் ஆவர் என்று யாருமே நினைத்து இருக்க மாட்டார்கள்.ஆனால் அது நிஜமானது. இவர்கள் கலந்துக் கொள்ளும் எல்லா பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் கேட்டகப்படும் முதல் கேள்வி “ கல்யாணம் பண்ணிக்க போறீங்களா சார்/மேம்? “ என்பது தான்.

ரொம்ப காலத்திற்கு இவர்களது காதல்படுமுகக்கமாக வளர்ந்து வந்தது. ஆனால் இது குறித்த செய்திகள் கசியத் தொடங்கிய போது இருவரும் அதை மறுக்கவும்இல்லை, ஆமாம் என்று ஆமோதிக்கவும் இல்லை

இவர்கள் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க,பேரழகன்,மாயாவி,ஜூன் R, சில்லுனு ஒரு காதல் என மொத்தம் 7 படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். குறிப்பாக காக்கா காக்கா படத்திற்கு பிறகு தான் இருவரும் மிகவும் நெருக்கமானர்கள். ஜில்லுனு ஒரு காதல் படத்தில்  கணவன் – மனைவி ரோல்.சொல்லி வைத்தது போல் அதே ஆண்டு இருவருக்கும் பிரம்மாண்டமாக, ரசிகர்களின் பேராதரவுடன் திருமணம் அரங்கேறியது.

சூர்யா -ஜோதிகா நடித்த இந்த படங்களை இப்போது டிவியில் போட்டாலும் வாயை பிளந்து கொண்டு அவர்களை ரசிக்கும் 90ஸ் கிட்ஸ்கள் ஏராளம். அப்படி சூர்யா – ஜோ கெமிஸ்ட்ரில் கலக்கிய டாப் 3 படங்களின் பிளாஷ்பேக் தான் இது.

1. பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)

இயக்குனர் வசந்த் இயக்கத்தில், சூர்யா ஜோதிகா முதன்முதலாக இணைந்து நடித்த படம். சூர்யாவிற்கு இது 5 ஆவது படம். ஜோதிகா இந்தப் படத்துக்கு முன் இந்தியில் சில படங்கள் நடித்திருந்தாலும் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான முதல் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.இரவா பகலா…’ பாடலை இன்று கேட்டாலும் முதல் இரண்டு நொடிகளில் சோகத்தைக் கடத்திவிடும்.மியூசிக் போட்ட யுவனுக்கு அப்போது 18 வயசு.

நகைச்சுவை காதல் திரைப்படமாக வெளியான இந்த படத்தில் ஜோதிகாவுக்கு இண்ட்ரோ சாங் கொடுக்கப்பட்டது. அப்போதெல்லாம் பெரிய நடிகைகளுக்கு மட்டுமே இண்ட்ரோ சாங் கொடுக்கப்படும் ஆனால் முதல் படத்திலேயே ஜோதிகாவுக்கு அது அமைந்தது. அதுமட்டுமில்லை இந்த படத்தில் சூர்யா 100 பூக்களின் பெயர்களை ஒரே ஷாட்டில் கூறி அசத்தி இருப்பார்.இந்த பூக்களின் பெயர்கள் அனைத்தும் கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் இருந்து எடுக்கப்பட்டவை.

மீண்டும் அந்த சீஸ் உங்கள் பார்வைக்கு இதோ…

2. காக்க காக்க (2003)

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ஆக்‌ஷன் போலீஸ் கதை. அன்புச்செல்வன் என்ற சீரியஸ் ஆன்ஸம் போலீஸாக சூர்யா.அந்த ரோலுக்காகவே அளவு எடுத்து செய்தது போல் சூர்யா அப்படியே தன்னை செதுக்கி இருந்தார். உடல் தோற்றம், பேச்சு என சூர்யாவை நிஜ போலீசாகவே கவுதம் மாற்றி இருந்தார். தமிழ் சினிமாவில் போலீஸ் கதாபாத்திரம் அவ்வளவு எளிதாக யாருக்கும் பொருந்திடாது அந்த வகையில் சூர்யாவுக்கு முதல் போலீஸ் படமே பேர் சொல்லும் படமாக அமைந்து விட்டது.

டீச்சராக மாயா ரோலில் ஜோதிகா வாழ்ந்திருப்பார். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். குறிப்பாக உயிரின் உயிரே பாடல் இளசுகளின் செல்போன் ரிங்டோன் தான். அதற்கு பிறகு கவுதம் – ஹாரிஸ் ஜோடி தான் டாப்.இவர்கள் இருவரும் தனியாக ட்ரெண்ட் செட்டரை உருவாக்கினார்கள். இந்த படத்தின் கதை முதலில் ஜோதிகாவிடம் தான் கூறப்பட்டது. அவர் தான் சூர்யாவுக்கு சிபாரிசு செய்தார் என்பது சில ஆண்டுகள் முன்பு தான் அனைவருக்கும் தெரிய வந்தது. காக்க காக்க திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி ஜாக்பாட் அடித்தது.

இந்த படத்தில் இருவரின் காதல் காட்சிகள் இப்ப வரைக்கும் அனைவராலும் ரசிக்கப்படும்ஒன்று. அதில் ஒரு காட்சியை இப்போது பார்க்கலாம்.

3. சில்லுனு ஒரு காதல் (2006)

கௌதம் மேனனின் சிஷ்யர் கிருஷ்ணாவின் இயக்கதில் முதல் படம். சூர்யா – ஜோதிகா திருமணத்திற்க்கு முன்பு வெளியானது. ரஹ்மான் – வாலி காம்பினேஷனில் இளசுகளுக்கானரொமாண்டிக் படம். படத்தில் பூமிகாவும் இடம் பெற்றிருப்பார்.

முன்பே வா என் அன்பே வா பாடல் அப்போது இல்லை இப்போது இல்லை எப்போதுமே காதல் செய்பவர்களுக்கு ஆல் டைம் ஃபேவரெட் தான். மற்ற படத்தில் ஆவது சூர்யா – ஜோதிகா லவ் பண்ற மாறி தான் காட்சிகள் இருக்கும். ஆனால் இந்த படத்தில் ஒருபடி மேலே போயி இருவருக்கும் திருமணமே ஆகிவிடும். அதுவும் விருப்பம் இல்லாமல். நம்புற மாறியா இருக்கு. ஆனா அதுக்கு அப்புறம் இருவருக்கும் இடையில் இருக்கும் நம்பிக்கை, காதல், சூர்யாவின் பிளாஷ்கேப் என பல உணர்சிக்களை இயக்குனர் திரைக்காட்டிருப்பார்.

ஒருவேளை இருவருக்கும் திருமணம் ஆகி இருந்தால் இப்படி தான் வீட்டில் இருப்பார்களோ என்றெல்லாம் ரசிகர்களை யோசிக்க வைத்த படம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Surya jyothika movies surya jyothika love movies surya jyothika tamil movies

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X