/tamil-ie/media/media_files/uploads/2020/05/New-Project-2020-05-03T152929.416.jpg)
surya - jyothika clan coddess temple worship, surya - jyothika, சூர்யா, ஜோதிகா, சூர்யா ஜோதிகா குடும்பத்துடன் குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு, வைரல் வீடியோ, surya son and daughter family went to clan goddess temple, viral video, tamil cinema news, tamil cinema viral news
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்கள் சூர்யா - ஜோதிகா, தங்கள் மகன் மகளுடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிளாக் அண்ட் ஒயிட் படம் காலம் முதல் டிஜிட்டல் காலம் வரை நடித்தவர் நடிகர் சிவக்குமார். நடிகர் சிவக்குமாரின் மகன்கள் சூர்யா, கார்த்தி 2 பேரும் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் மகள் உள்ளனர்.
சிவக்குமாரின் மகன்கள் சூர்யா - கார்த்தி இருவரும் அகரம் அறக்கட்டளை மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு படிப்பதற்கு உதவி செய்து கல்விப்பணி செய்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா, ஒரு சினிமா விருது வழங்கும் நிகழ்வில் கோயில் பற்றி பேசியது சர்ச்சையானது. ஜோதிகாவின் பேச்சுக்கு இந்துத்துவ ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதே அளவுக்கு ஆதரவு குரல்களும் எழுந்தன.
ஈரோடு குலதெய்வம் கோயிலில் குடும்பத்துடன் #சூர்யா#Suriya Family in Erode Temple December 2019@Suriya_offl#Jyothikapic.twitter.com/UMS0UHgnGq
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) May 3, 2020
இந்த நிலையில், 6 மாதங்களுக்கு முன்பு சூர்யா - ஜோதிகால், அவரது மகன், மகள் என குடும்பத்தினருடன் குல தெய்வ கோயிலுக்கு வழிபாடு செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், சூர்யா - ஜோதிகாவின் மகள் தியா பட்டு பாவாடை சட்டையிலும் மகன் தேவ் வேட்டி சட்டையிலும் க்யூட்டாக உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.