Advertisment
Presenting Partner
Desktop GIF

"மும்பைக்கு குடியேறியதில் ஜோதிகாவுக்கு மகிழ்ச்சி "... முதன்முறையாக மனம் திறந்த சூர்யா

சூர்யா தனது குடும்பத்தினருடன் மும்பைக்கு குடியேறிய பின்பு, நடிகையும் தனது மனைவியுமான ஜோதிகாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்ததாக கூறியுள்ளார். மேலும், ஜோதிகா மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சூர்யா மனம் திறந்து பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Jo and surya

நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் மும்பைக்கு குடியேறியது குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

Advertisment

கொரோனா தொற்றுக்கு பின்னர், நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் மும்பைக்கு குடியேறுவது என்ற முக்கிய முடிவை எடுத்தனர். மேலும், மும்பையில் உள்ள பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்த்து, அங்கேயே வசிக்க தொடங்கியுள்ளனர். அண்மையில், கங்குவா திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சூர்யா அளித்த நேர்காணலின் போது, மும்பைக்கு குடியேறியதன் மூலம் தனது குடும்பம் எளிமையான வாழ்க்கை வாழ்வதற்கு வழிவகுத்ததாகவும், புகழ் வெளிச்சத்தில் இருந்து விலகி சாமானியர்களின் குழந்தைப்பருவம் தங்கள் குழந்தைகளுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Suriya on moving to Mumbai: ‘I’m happy my kids can play and interact with others freely’

மேலும் இது குறித்து விவரித்துள்ள சூர்யா, "18 அல்லது 19 வயது இருக்கும் போது சென்னையில் குடியேறிய ஜோதிகா அங்கேயே 27 ஆண்டுகள் வசித்தார். என்னுடனும், எனது குடும்பத்தினருடனும் ஜோதிகா எப்போதுமே இருந்தார். குறிப்பாக, தனது தொழில், நண்பர்கள் மற்றும் பந்த்ரா வாழ்க்கை முறை உள்ளிட்ட பலவற்றை ஜோதிகா விட்டுக் கொடுத்தார். கொரோனா தொற்றுக்கு பின்னர் ஒரு மாற்றம் தேவைப்பட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் ஜோதிகாவிடம் தொழில் ரீதியான மாற்றம் இல்லாமல் இருந்தது. பெண்களை மையமாக கொண்ட திரைப்படங்கள் அதிகளவில் இல்லாத காரணத்தினால், 2டி நிறுவனத்தை தொடங்கினோம்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய சூர்யா, "ஜோதிகா பல சவால்களை எதிர்கொண்டார். நான் அனுபவம் வாய்ந்த இயக்குநர்களுடன் பணியாற்றிய நேரத்தில், அவர் பெரும்பாலும் அறிமுக இயக்குநர்களுடன் சேர்ந்து பணியாற்றினார். நாங்கள் மும்பைக்கு குடியேறிய பின்னர் தான், ஜோதிகா பல வித்தியாசமான திரைப்படங்களில் பணியாற்றினார். குறிப்பாக, ஷைத்தான், காதல் தி கோர் போன்ற சுவாரசியமான படங்கள் அமைந்தன" எனக் கூறினார்.

மும்பைக்கு குடியேறியது ஜோதிகாவிற்கு தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியாகவும் சிறப்பாக அமைந்ததாக சூர்யா குறிப்பிட்டுள்ளார். அதன்படி, "மும்பையில் இருப்பதன் மூலம் ஜோதிகா தனது பெற்றோருடன் மகிழ்ச்சியாக உள்ளார். விடுமுறை, நட்பு, பொருளாதார சுதந்திரம், ஆரோக்கியம், மரியாதை போன்றவை ஆண்களைப் போன்று பெண்களுக்கும் தேவை என்பதை நான் புரிந்து கொண்டேன். ஜோதிகா அவர் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை எதற்காக தடுக்க வேண்டும்? நான், எனக்காக என்ற மனநிலையை முதலில் மாற்ற வேண்டும். ஒரு நடிகையாக அவரது வளர்ச்சியைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு மேலும் பல நல்ல வாய்ப்புகள் அமையும் என நாம் நம்புகிறேன்" என சூர்யா கூறியுள்ளார்.

மேலும், மும்பைக்கு சென்றதால் தனது குழந்தைகளுடன் நேரம் செலவிட முடிவதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் "எனது குழந்தைகள் மும்பையில் பயின்று வருவதை போன்ற கல்வி நிறுவனங்கள், சென்னையில் குறைந்த அளவிலேயே உள்ளன. குழந்தைகள் தங்கள் கல்வியில் சிறந்து விளங்குவதை நான் ஆசீர்வாதமாக கருதுகிறேன். சென்னை மற்றும் மும்பைக்கு இடையே எனது நேரத்தை என்னால் சமாளிக்க முடிகிறது. படப்பிடிப்புகளில் இருந்து குறைந்தபட்சம் 10 நாள்கள் விடுப்பு கிடைக்கிறது. அந்த நேரத்தில் மும்பையில் நான் அமைதியை உணர்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இதேபோல், "எனது மகளுடன் பூங்காவில் நடைபயிற்சி செல்கிறேன். எனது மகனை கூடைப்பந்து விளையாட அழைத்துச் செல்கிறேன். என் குடும்பத்தினரும் என்னை இங்கு வந்து சந்திக்கின்றனர். அவர்களுடன் ஷாப்பிங் செல்கிறேன். சாமானியர்களின் வாழ்க்கையை எனது குழந்தைகள் அறிந்து கொள்வது அவசியமாகிறது. மற்றவர்களுடன் எனது குழந்தைகள் உரையாடுவது, விளையாடுவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்" என சூர்யா கூறியுள்ளார்.

கடந்த 1999-ஆம் ஆண்டு பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திற்காக சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் முதன்முதலாக சந்தித்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த 2006-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு தியா மற்றும் தேவ் என இரு குழந்தைகள் உள்ளனர்.

Jyothika Actor Suriya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment