இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம், ‘என்.ஜி.கே.’ இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
அதோடு, சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், சம்பத் ராஜ், மன்சூரலிகான் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்துள்ள இதனை ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இந்தப் படத்தின் ட்ரைலர் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படம் எப்போது திரைக்கு வரும் என சூர்யா ரசிகர்கள் வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தனர்.
இந்நிலையில் ’நந்த கோபாலன் குமரன்’ எனும் ‘என்.ஜி.கே’ திரைப்படம் மே 31-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.