சூர்யாவின் சூரரைப் போற்று; மிரட்டலான செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது

சூர்யா நடித்துள்ள் சூரரைப் போற்று திரைப்படத்தின் செகண்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இதனை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Surya, actor surya, Soorarai Pottru movie, சூர்யா, Soorarai Pottru, சூரரைப் போற்று
soorarai pottru teaser

சூர்யா நடித்துள்ள் சூரரைப் போற்று திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை 2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?

காப்பான் திரைப்படத்திற்குப் பிறகு, தற்போது சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் சூரரைப் போற்று. இந்தப் படத்தை இயக்குனர் சுதா கொங்காரா இயக்கியுள்ளார். சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபரணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் மோகன்பாபு, ஜாக்கி ஷெராப் கருணாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

சூரரைப் போற்று படத்தின் கதை ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சில சுவராசியமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சூரரைப் போற்று படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து இந்தப் படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நடைபெற்றுவருகிறது.

சூரரைப் போற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


இதையடுத்து, 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் டுவிட்டர் சூரரைப் போறு திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு சூர்யா ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தளித்துள்ளது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Surya soorarai pottru movie second look poster release

Next Story
பிகில், விஸ்வாசம், பேட்ட… 5 நாள் அதகளப்படுத்தும் சன் டிவிSun TV Pongal Movies: Tamil tv news pongal movies in sun tv Bigil Viswasam Petta Namma Veettu Pillai Sanga Thamizhan announced- சன் டிவி பொங்கல் திரைப்படங்கள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express